வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு | Reduction in cylinder prices for commercial use

சென்னை: வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து ரூ.1,921.50-க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

இதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.43.50 குறைந்து, ரூ.1,921.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் இன்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!