இலங்கைக்கான வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக இடைநிறுத்தத்தை உத்தியோகபூர்வமாக நீக்கி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சர் என்ற வகையில் இன்று (31) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, “இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) விதிமுறைகள் 2025 இன் 02” என்ற தலைப்பிலான அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி பொது பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சிறப்பு நோக்க வாகனங்கள், வணிக அல்லது சரக்கு போக்குவரத்து வாகனங்கள், தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் பிற மோட்டார் அல்லாத பொருட்களின் இறக்குமதி மீதான தற்காலிக இடைநிறுத்தத்தை நீக்குகிறது.
மோட்டார் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் விதிமுறைகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், உப பிரிவு 4(1) மற்றும் பிரிவு 14 ஆகியவற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட பிரிவு 20 இன் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
வர்த்தமானியை பார்வையிட இங்கே அழுத்தவும்