வாக்களிப்பது எப்படி என்பது குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு

Election, எப்படிஜனாதிபதித் தேர்தலில் வாக்குகள் நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வாக்களிப்பது எப்படி குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களுக்கு அறிவித்துள்ளது.

வாக்காளர் தனது அடையாளத்தை காண்பிப்பதற்காக வாக்குச் சீட்டில் ஏதாவது எழுதப்பட்டு அல்லது குறிக்கப்பட்டிருந்தால் வாக்குச் சீட்டு நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்

1. எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காத போது,
2. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் போது,
3. இரண்டாவது விருப்பு வாக்கு அல்லது மூன்றாவது விருப்பு வாக்கு மட்டும் குறிக்கப்பட்டால்,
4. ஒன்றல்லாத வேறு சின்னத்துடன் 2, அல்லது 3 விருப்பங்கள் குறிக்கப்படும் போது,
5. 1வது 2வது 3வது விருப்பு வாக்குகளுக்கு அதிமாக வாக்குகள் குறிக்கப்பட்டிருந்தால்,

குறித்த வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும் அத்துடன் மேலும் இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகள் அளிக்க முடியும்.

இருப்பினும், வாக்காளர் விரும்பினால் மட்டுமே இவ்வாறு ஏனைய இருவருக்கு விருப்பு வாக்கு அளிக்க முடியும்.

வாக்காளர் தனது வாக்குச் சீட்டில் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு முன்னால் ஒதுக்கப்பட்ட பிரிவில் ஒன்று (1) என இலக்கத்தை குறியிட்டு வாக்களிக்க வேண்டும்.

அத்துடன் (2) இரண்டு மற்றும் (3) மூன்று இலக்கங்களைக் குறிப்பதன் மூலம் உங்களது இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளை நீங்கள் அளிக்கலாம்.

ஒரு வாக்காளர் தனது இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பத்தினை வாக்குச் சீட்டொன்றில் குறித்திருக்காவிட்டாலும் அது ஒரு வேட்பாளருக்கு சரியாக குறிக்கப்பட்ட வாக்காக இருப்பின் அது செல்லுபடியான வாக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.

 

|➥  Facebook
|➥  WhatsApp
|➥  Sarinigar – Contact Us

Leave a Reply