மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் விவாதத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (08) இடம்பெறவுள்ளது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த விவாதம் நடைபெறுகின்றது.
முதலாவது நாளான நேற்று (07) இடம்பெற்ற விவாதத்தில் சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ, டிலித் ஜயவீர மற்றும் பீ. அரியநேன்திரன் ஆகிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதில் திலித் ஜயவீர மற்றும் பி. அரியனேத்திரன் ஆகிய இருவர் மட்டுமே கலந்து கொண்டதுடன் சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொள்ளாமல் நழுவி விட்டார்கள்.
இதேவேளை, இன்று (08) நடைபெறவுள்ள விவாதத்தில் விஜயதாச ராஜபக்ச, சரத் மானமேந்திர, அனோஜ் டி சில்வா மற்றும் ஓசல ஹேரத் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த விவாதம் இன்று பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை இடம்பெறவுள்ளதாக மார்ச் 12 இயக்கத்தின் அழைப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
வளர்ந்த ஜனநாயக நாடுகளில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் இவ்வாறான பகிரங்க விவாதங்களில் தைரியமாக பங்கேற்பது வழக்கமாகும். ஆனால் இலங்கையில் இது போண்ற பகிரங்க விவாதங்களுக்கு முக்கிய வேட்பாளர்கள் கலந்து கொள்ளாமல் தலைமறைவாகுவதன் காரணம் தான் என்ன?