வெற்றிகரமான வியாபாரம் ஒன்றை எவ்வாறு தொடங்குவது?

வெற்றிகரமான வியாபாரம் ஒன்றை எவ்வாறு தொடங்குவது?
பலர் வேலை வாய்ப்பொன்றை தேடுவதில் கனவு காணும் போது, அல்லது தனது வேலையில் பதவி உயர்வு பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள், இதில் உலகில் மிகச் சிலரே சொந்த வியாபாரம் ஒன்றை தொடங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.
உண்மையில், இது உலகின் மிகச் சிறந்த நிறுவனமொன்றில் சம்பளத்திற்ககு செய்யும் வேலையை காட்டிலும் சிறந்த யோசனையாகும். ஏனென்றால், ஒருவர் உலகின் மிகப் பெரிய நிறுவனத்தில் உயர்ந்த வேலையில் கடமையாற்றினாலும், அவர் அதில் வெறும் ஒரு ஊழியர்தான்.
ஆனால், நீங்கள் சொந்தமாக சிறு வியாபாரம் ஒன்றை தொடங்கினால், அந்த வியாபாரத்தின் உரிமையாளர், முதலாளி நீங்கள்தான். இருப்பினும், எந்த விடயமானாலும் அதை ஆரம்பிப்பது தான் கடினமானது.
எனவே, ஒரு வியாபாரம் எவ்வாறு வெற்றிகரமாக தொடங்குவது என்பதை அறிவது, ஒரு வியாபாரம் தொடங்க வேண்டும் என்று கனவு காணும் எவருக்கும் உறுதியான அடித்தளமாகும்.
▬ உங்களுக்கு சிறப்பாக செய்ய முடியுமான, மிகவும் விருப்பமானதிலிருந்து ஆரம்பியுங்கள்
நமக்குப் பிடித்தமான விடயங்களை ஆர்வத்துடன் செய்கிறோம், பிடிக்காததை அலுப்புடன் சோம்பேறித்தனமாகச் செய்கிறோம். எனவே, ஒரு தொழிலைத் தொடங்கும் போதும் அவ்வாறன நிலைமையே காணப்படும்.
நீங்கள் மிகவும் விரும்பக் கூடிய அதிக ஈடுபாடுள்ள ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் உங்கள் கனவு வியாபாரத்தை உருவாக்குவது உங்களுக்கு மிக விரைவான வெற்றிப் பயணத்தைத் ஈட்டித் தரும்.
உங்களுக்கு அந்த குறிப்பிட்ட துறை பற்றி தெரியும் என்பதால், அதைப்பற்றி உங்களுக்கு நிறைய நடைமுறை அனுபவம் கூட இருக்கலாம், மேலும் உங்களுக்கு அதில் நல்ல பயிற்சி அனுபவம் இருப்பதால், அது உங்களுக்கு இயல்பாகவே வசதியாக அமையும்.
அதுமட்டுமல்லாமல், நீங்கள் விரும்பும் துறையின் அடிப்படையில் உங்கள் வியாபாரத்தை தொடங்குவதால், அலுப்பு, சோர்வின்றி அதிக நேரம் ஈடுபாட்டுடன் உங்கள் வியாபாரத்தை நடாத்தலாம்.
ஒரு வியாபாரத்தை தொடங்குவதற்கான உந்துதல் என்பது, உங்களிடம் உள்ள ‘பணமாக்க் கூடிய’ திறன் அதாவது (நீங்கள் ஒரு திறமையான புகைப்படக் கலைஞராக இருந்தால், அதை ஏன் வியாபார ரீதியில் முயற்சிக்கக்கூடாது?) என்பதாகும்.
▬ சமூகத்தின் தேவையை அறிந்து கொள்ளுங்கள்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, நீங்கள் மிகவும் விரும்பும் மற்றும் ஈடுபாடு கூடிய ஒன்றைக் தெரிவு செய்து ஒரு வியாபாரத்தை தொடங்குவது என்றால் அது மக்களின் தேவையாக, மக்கள் அதிமாக நாடக்கூடிய விடயமாக இருக்க வேண்டும்.
புதிதாக ஒரு தொழில் தொடங்கும் போது கவணிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விடயம் இதுவாகும். உங்கள் வியாபார யோசனை சமூகத்தில் அதிகமான மக்களுக்குத் தேவைப்படுவதாக இருந்தால், உங்கள் வியாபாரத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
அதே போல் மக்களின் அந்த தேவையை பூர்த்தி செய்வதற்காக நீங்கள் வழங்கும் தயாரிப்பு அல்லது பொருள் மக்களினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய மலிவு விலையில் வழங்க முடியுமாக இருப்பது முக்கியமானதாகும்.
▬ நீங்கள் ஒரு வியாபாரத்தை தொடங்கினால், அதனைப் பற்றிய சாத்தியக்கூறு ஆய்வு அவசியமாகும். இது பெரும்பாலும் திட்டமிடலுடன் தொடர்புடையது. உங்கள் வியாபார நோக்கத்தை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறீர்கள், நிதிகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள், உங்கள் தேவைகளை மற்றும் உங்கள் வேலையை எவ்வாறு மதிப்பாய்வு செய்கிறீர்கள் என்பவை நீங்கள் ஒரு வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்த முடியுமா என்பதை தீர்மானிக்கும் இதர காரணிகளாகும்.
அடுத்தது உங்கள் வியாபாரத்தை தொடங்குவதற்கு போதுமான மூலதனம் உங்களிடம் இருக்க வேண்டும். இங்கு மிக முக்கியமாக ஆரம்பத்தில் இருந்தே உங்களின் மூலதனத்தை சரியான முறையில் திட்டமிட்டு கையாளப்படுவது அவசியமாகும்.
வியாபாரம் தொடரும்…

Leave a Reply