வேலை அதிகம் என்றாலும் நேரம் இல்லையா? இந்த 5 செய்து பாருங்கள்.

வேலை அதிகம் என்றாலும் நேரம் இல்லையா? இந்த 5 செய்து பாருங்கள்.
வேலை அதிகம் என்றாலும் நேரம் இல்லையா?

இன்று நாம் அனைவரும் மூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் ரொம்ப பிஸியாக இருக்கின்றோம்.

ஏதோ மூச்சு விடுவதெல்லாம் தானாக நடைபெறுவதால் நாம் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

மாறாக சுவாசித்தல், உணவை ஜீரணமாக்குதல், கண் சிமிட்டுதல் போன்ற வேலைகளை நாமே செய்ய வேண்டும் என்றால் நமது கதி அவ்வளவுதான்.

எமக்கு இருக்கும் வேலைகள் எவ்வளவு அதிகம் என்றால் திங்கட் கிழமை நாளை நாங்கள் சுத்தமாக விரும்ப மாட்டோம். வார இறுதியில் வேலை செய்பவராக இருந்தாலும், வார இறுதியில் குறைந்தது மூன்று நாட்களாவது இருந்தால் நன்றாக இருக்குமே, ஒரு நாளில் நேரம் 24 மணித்தியாலத்திற்கு கூடுதலாகா இருக்கக் கூடாதா, என யோசிப்போம்.
ஆனால் அப்படி யோசித்தாலும் அது நடக்காது என்பதை நாம் அறிவோம். எனவே அதற்கு பதிலாக நேரத்தை அதிகரித்துக் கொள்வது எப்படி என்று இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

1. உங்களுக்கு பொருத்தமான நேரத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்

ஒவ்வொருவருக்கும் வேலைகளை செய்வதற்கு பிடித்தமான நேரங்கள் உண்டு.
(ஆனால் உங்களுக்கு எந்த வேலையும் செய்ய விருப்பமில்லாமல் சோம்பல் அல்லது அலுப்பு நிலையை உணர்கிறீர்கள் என்றால், எங்கள் முந்தைய கட்டுரையைப் படியுங்கள். Click )
சிலர் அதிகாலையில் எழுந்ததும் அனைத்து வேலைகளையும் கெத்தாக செய்து முடிப்பார்கள். சிலர் இரவில் கண் விழித்து வேலை செய்வார்கள். இது போல் உங்களுக்கு வேலை செய்வதற்கு பொருத்தமான சிறந்த நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளை எப்படியாவது செய்து முடிப்பனே் என்று உறுதியாக இருங்கள்.
நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், இந்த முறை மிகவும் பொருத்தமானது. உங்களுக்குப் பொருந்தாத நேரத்தில் தூங்கித் தூங்கி படிக்க முற்படுவதை விட ஏனைய நேரங்களில் உங்களின் இதர வேலைகளை செய்து விட்டு உங்களுக்கு பொருத்தமான, பிடித்த நேரத்தில் சிறப்பாக படிக்கத் தொடங்கலாம்.

2. ஒவ்வொன்றாக முடிக்கவும்

வேலை செய்ய ஆரம்பித்த பிறகு, எவ்வளவு வேலை இருந்தாலும், எவ்வளவு அவசரமாக இருந்தாலும், அனைத்தையும் இழுத்து போட்டு கிட்டு, அங்கும் இங்குமாக ஒழுங்கின்றி வேலையை செய்ய முற்பட வேண்டாம்.
நிதானமாக சிந்தித்து, செய்து முடிப்பதற்கு இலகுவான வேலையை முதலில் செய்து முடிங்கள். அந்த வேலையை முடிப்பது என்பது நீங்கள் செய்ய வேண்டிய பல வேலைகளில் ஒன்று முடிந்தது விட்டது என்று அர்த்தம். அப்போது மனம் நிம்மதியும் உற்சாகமும் பெறும்.
கடினமான வேலையிலிருந்து ஆரம்பித்தால் அதிலேயே சுழன்று சுழன்று நேரம் வீணடிக்கப்பட்டு, அலுப்புத் தட்டி கடைசியில் எந்த வேலையும் செய்து முடிக்கப்படாத ஒரு நாளாக அது மாறிவிடும்.
மருத்துவ ரீதியாகப் பார்த்தால், நாம் ஒன்றன் பின் ஒன்றாக வேலைகளை முடிக்கும்போது, ​​​​நமது மூளை டோபமைன் என்ற மகிழ்ச்சிகறமான ஒரு நிலமையை வெளியிடுகிறது. அப்போது நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியும், உற்சாகமும் நம்மை மேலும் மேலும் வேலை செய்யத் தூண்டும்.

3. ஒரு பட்டியல் அவசியமானது

இப்போது வேலையை ஒவ்வொன்றாக செய்வதற்கு, அவற்றை வரிசையாக பட்டியலிடுவது அவசியமாகின்றது. எல்லாவற்றையும் நினைவாற்றலால் செய்து கொள்ள முடியும் என்று நாமக்கு நாமே கெத்தைக் காட்டிக் கொண்டாலும். பாதி நாள் கடக்கும் போது வேலை பழு காரணமாக ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கூட நமக்கு யோசனையில்லை.
எனவே ஒரு பட்டியலை உருவாக்குவதே இதற்கு சிறந்த தீர்வாகும். ஒரு தாளில் அல்லது Google Keep போன்ற ஒரு செயழி மூலம் இது போன்ற பட்டியலை உருவாக்கலாம்.
இதை எழுதும் போது ஆரம்பத்தில் இலகுவான வேலைகளையும் அதன் பின் ஒவ்வொன்றாக கடினமான வேலைகளையும் எழுதுங்கள், குறிப்பிட்ட வேலையை செய்து முடிந்ததும் அதில் ஒன்றன் பின் ஒன்றாக வெட்டி விடுங்கள்.
அப்புறம் நான் இந்த வேலைகளை செய்து முடித்துள்ளேன், இன்னும் இந்த இந்த வேலைகளை செய்ய வேண்டியுள்ளது, அதற்கு இன்னும் இவ்வளவு நேரம் எஞ்சியுள்ளது, என நமக்கு ஒரு இலகுவான தீர்மாணத்துக்கு வரலாம்.
அதற்காக இரண்டு, மூன்று நாட்களின் வேலைகளை ஒரே நாளில் செய்து முடிப்பதற்கு பட்டியலிடடுவது பொருத்தமற்ற செயலாகும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

4. இன்றைய பட்டியலை இன்றே முடிக்கவும்

வேலைகளை பிற்போடுவது என்றால் எமக்கு ரொம்ப பிடிக்கும். வேலைகளை பிற்போடுமம் வேலையை மட்டும் நாம் சிறப்பாக செய்கின்றோம். அய்யோ இப்போது அலுப்பாக இருக்கிறது, இப்போது தூக்கம் வருகிறது, இப்போது பசி வருகிறது, இப்போது சூடு, குளிர், தலைவலி அது இது என்று வேலையை பிற்போடுவதற்கு மட்டும் பல நூறு காரணங்கள் நம்மிடமுள்ளன.
இறுதியில் நடப்பது, பிற்போடப்பட்ட வேலைகள் குவிந்து, நேரம் இல்லை என நாமே சிக்கலில் மாட்டிக் கொள்வதுதான்.
எனவே நீங்கள் பட்டியலிட்ட அனைத்து வேலைகளையும் கண்டிப்பாக செய்து முடிப்பேன், அதன் பின் சுதந்திரமாக நிம்மதியாக இருப்பேன் என்று உறுதி கொள்ள வேண்டும். பிஸியான நாட்களில், இன்று எல்லா வேலைகளையும் முடித்துவிட்டால், தனக்கு பிடித்தமான இந்த வேலையை செய்வேண், இந்த இடத்திற்கு போய் ரிலாக்ஸ் ஆக இருப்பேன் என்று நினைத்துக் கொள்ளுஙகள்.

5. நாள் முடிவில் எவ்வளவு வேலை செய்யப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்

அன்றைய நாள் முடிவில் அலுவலகத்தை விட்டு வெளியேறும் முன் அல்லது வீட்டிற்குச் சென்று ஓய்வாக இருக்கும் நேரம், ​​​​இன்று காலையில் நான் எழுதிய பட்டியலில் எவ்வளவு வேளைகளை முடித்துள்ளேன் என்று சிந்தியுங்கள்.
படுக்கைக்குச் சென்ற பிறகு இதைப் பற்றி சிந்திக்க முற்பட வேண்டாம். அது தூங்குவதற்காண ஒரு நிமிடத்தையேனும் வீணடிக்கும், இதனால் நாளை தினம் மிகவும் கடினமாதாக இருக்கும்.
உங்களின் வேலை திறமையை நீங்களே விமர்சனம் செய்து பழகும்போது, ​​ நீங்கள் செய்ய வேண்டிய வேலையை கவனத்துடனும் ஆர்வத்துடனும் செய்வதற்கு உங்களுக்கு தானாகவே ஒரு முக்கியத்துவம் ஏற்படும். இனி வரும் நாட்களில் வேலைகளை ஒழுங்காக, குறிப்பிட்ட நேரத்தில் எப்படி செய்து முடிக்கலாம். நமது வேலைகளில் காணப்படும் குறைப்பாடுகளை எவ்வாறு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நாங்கள் மிகக் குறுகிய வாழ்க்கையே வாழ்கிறோம். எனவே அந்த குறுகிய காலத்தில் நமக்காகவும், நம் அன்புக்குரியவர்களுக்காகவும், சமுதாயத்திற்காகவும் அதிகபட்ச வேலைகளைச் செய்ய வேண்டும். அப்போது தான் அழகான உலகம் பிறக்கும். நேரம் முக்கியமானது.
– ரீஸாஹ் ஜெஸ்மின்
Assalamu Alaikkum!
Follow us to get more useful articles like this soon.
Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply