100,000க்கு குறைவாக இருந்தால் வரி செலுத்த வேண்டாம் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

100,000க்கு குறைவாக இருந்தால் வரி செலுத்த வேண்டாம் - ரஞ்சித் சியம்பலாபிட்டிய
வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு வருவாய்த் துறையினரால் தகவல் கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றாலும், அவர்களின் மாதாந்த வருமானம் 100,000 ரூபாயை தாண்டவில்லையென்றால் அதனை எழுத்துப்பூர்வமாக அறிவித்து விட்டு வரி செலுத்துவதை தவிர்க்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அருகிலுள்ள உள்நாட்டு வருவாய்த் துறையின் வட்டார அலுவலகத்துக்குத் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதுவரை 23 லட்சம் பேர் (TIN) வரி நம்பர் பெற்றுள்ளதாகவும், ஜூன் மாதத்தில் மட்டும் 13 லட்சம் பேர் அந்த எண்ணைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜூலை மாத இறுதிக்குள் (TIN) எண்கள் வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையை 73 லட்சமாக உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

TIN வரி அடையாள எண் பெறுவது எப்படி?

Follow us to get more useful articles like this soon. Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!