29 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு அபாயம்

Dengu - டெங்கு29 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் உள்ள 29 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் இவ்வாறு டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் லஹிரு கொடிகுத்துக்கு தெரிவித்தார்.

அதற்கமைய எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் 04 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு 29 வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையில் 36,552 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றனர். அந்த எண்ணிக்கை 15,120 ஆகும்.

டெங்கு காய்ச்சலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

 

|➥  Facebook
|➥  WhatsApp
|➥  Sarinigar – Contact Us

Leave a Reply