மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் காணப்படும் பதற்ற நிலைமையை அடுத்து அங்கு வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கை தூதரகம் வழங்கும் என்று அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் அவசர நிலைமை ஏற்பட்டால், 011 233 8812 அல்லது 011 771 1194 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

Leave a Reply

error: Content is protected !!