அனுர குமார 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்றார்

Anura_Kumara_Sarinigar, அனுர குமாரஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அனுரகுமார திஸாநாயக்க இன்று 23/09/2024 இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை ஜனநாயக மக்கள் அரசாங்கத்தின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டார், மேலும் அவர் இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் பெறப்பட்ட பெரும்பான்மை வாக்குகளை அடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் இலங்கையில் முதன்முறையாக இரண்டாவது விருப்பு வாக்கு எண்ணிக்கை இடம்பெற்றது.

இதன்படி, 2024 ஜனாதிபதித் தேர்தலின் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் அனுரகுமார திஸாநாயக்க பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 5,634,915 ஆகும், இது 42.31% வீதமாகும்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை – 5634915
இரண்டாம் சுற்று விருப்பு வாக்கு எண்ணிக்கை – 105264
மொத்த வாக்குகள் – 5740179

இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகள். இது 32.76% சதவீதமாகும்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை – 4363035
இரண்டாம் சுற்று விருப்பு வாக்கு எண்ணிக்கை – 167867
மொத்த வாக்குகள் – 4530902

ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளைப் பெற்றதுடன் இது 17.27% சதவீதமாகும்.

முழு கருத்துக்கணிப்பு முடிவுகள் இங்கே

2024 ஜனாதிபதித் தேர்தல்
2024 ஜனாதிபதித் தேர்தல் 2

 

 

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!