ஆப்பிள் ஐபோன் 15 : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அம்சங்கள்

ஆப்பிள் ஐபோன்

பல மாத ஊகங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் தொலைபேசிகள் இப்போது விற்பனைக்கு வந்துள்ளன, செப்டம்பர் 12, 2023 அன்று iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவற்றை வெளியிட்டது.

கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் iPhone மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை iPhone கொண்டுள்ளது.

இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் சொல்கின்றன.

தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புதிய மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யும். அந்த வகையில் நடப்பு ஆண்டில் iPhone 15 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

iPhone 15 Pro Max தவிர மற்றைய மூன்று மாடல்களும் ஒரே விலையில் தொடங்குகின்றன. இந்த நான்கில், ஐபோன் 15 மற்றும் 15 ப்ரோவில் 6.1 இன்ச் திரைகள் கொண்டுள்ளதுடன் ஐபோன் பிளஸ் மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸில் 6.7 இன்ச் பெரிய திரைகள் கொண்டுள்ளன.

புதிய வெளியீடுகளில் iPhone 15 ஆனது 6.1 இன்ச் திரை மற்றும் இரண்டு பின்புற கேமராக்களுடன் $800 ஆரம்ப விலையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

iPhone 15 பிளஸானது 6.7 இன்ச் திரை மற்றும் இரண்டு கேமராக்கள் கொண்டுள்ளதுடன் $900 ஆரம்ப விலையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.

iPhone 15 ப்ரோ மற்றும் 15 ப்ரோ மேக்ஸ் இரண்டும் அடுத்த தலைமுறை A17 ப்ரோ சிப்பைக் கொண்டுள்ளன.

6.1-இன்ச் திரையைக் கொண்ட iPhone 15 ப்ரோ நன்கு அறியப்பட்ட (triple rear camera setup) கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

iPhone 15 ப்ரோ மேக்ஸ் 5X native zoom level உடன் மடிந்த கேமராவைக் கொண்ட முதல் iPhoneஆகும்,

A17 Bionic சிப்செட்டானது 3.70 GHz கிளாக் ஸ்பீடை கொண்டிருக்கும் மற்றும் A16 Bionic பயன்படுத்தும் 4nm ப்ராசஸுடன் ஒப்பிடும்போது புதி சிப்செட் 3nm ப்ராசஸை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

மேலும் இந்த சிப்செட் 6GB LPDDR5 RAM உடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

iPhone 15ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சில புதிய அம்சங்களின் சுருக்கம் இதோ:

01- USB-C டைப்-சி சார்ஜிங் போர்ட்

02- iPhone 15 மற்றும் 15 Plus ஆனது பழைய A16 சிப் மூலம் இயக்கப்படுகிறது.

03- iPhone 15 Pro மற்றும் 15 Pro Max ஆனது புதிய A17 சிப்பில் இயங்குகிறது.

04- புரோ மாடல்கள் டைட்டானியத்தைப் பயன்படுத்துகின்றன, இது எடையைக் குறைக்கிறது.

05- iPhone 15 ப்ரோ மாடல்கள் Mute Switchக்குப் பதிலாக புதிய புரோகிராம் செய்யக்கூடிய ஆக்‌ஷன் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

06- சற்று பெரிய பேட்டரி அளவு

07- டைனமிக் ஐலேண்ட் இதில் உள்ளது

08- iPhone 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் மட்டும் நீண்ட ஜூம் வரம்புடன் கூடிய புதிய பெரிஸ்கோப் கேமராவைப் கொண்டுள்ளது.

வழக்கமான iPhone 15 மாடல்கள் 48MP சென்சாருடன் மேம்படுத்தப்பட்ட பிரதான கேமராவைப் பெறுகின்றன.

கவனிக்கத்தக்க புதிய அம்சங்கள் இவையாகும் அத்துடன் பல சிறிய மேம்பாடுகளையும் iPhone 15 மாடல்கள் கொண்டுள்ளது.

Leave a Reply