5 தலாவ பகுதியில் இன்று (01) அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. நேற்றையதினம் (31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்புக்குத் திரும்பும் போது…
Category: இலங்கை
3-1 க்கு என்ற வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது இந்தியா – Lanka Truth | தமிழ்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற…
காலி – ஹினிதும பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு
காலி – ஹினிதும பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொலைபேசி தரவு பகுப்பாய்வு மற்றும் சிசிடிவி காணொளி காட்சிகளின் ஊடாக…
வாகன இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு! – Athavan News
இலங்கைக்கான வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக இடைநிறுத்தத்தை உத்தியோகபூர்வமாக நீக்கி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சர் என்ற வகையில் இன்று (31) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதன்படி, “இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) விதிமுறைகள் 2025 இன் 02” என்ற…
சுப்பர் டீசல் விலை அதிகரிப்பு – LNW Tamil
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுப்பர் டீசல் லீற்றரொன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சுப்பர் டீசல் லீற்றரொன்றின் புதிய விலை 331 ரூபாவாகும். மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.…
தொற்று மற்றும் தொற்றாத நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்
நாட்டில் தொற்றக்கூடிய மற்றும் தொற்றாத நோய்களினால் சுகாதார அமைப்பு பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ள நிலையில், மேற்படி நோய்களுக்கான சிகிச்சை சேவைகளைப் போன்று நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார். இலங்கை போஷாக்கு சங்கத்தின்…
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்!
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, 313 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை…
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் இராஜினாமா
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் தலைவர் சிந்தக தர்ஷன ஹேவாபதிரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் 4 ஆம் திகதி அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி
17 இந்திய மீனவர்களும் தொடர்ந்தும் விளக்கமறியல்
5 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (31) உத்தரவிட்டார். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 17…
மாவை சேனாதிராஜா அவர்களின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்-பிரதமர்!
மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன். தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என…