மக்கள் வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீடு ‘A(lka)’ இலிருந்து ‘AA-(lka)’ஆக Fitch மதிப்பீடுகளால் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இது இலங்கை தேசிய மதிப்பீட்டின் சமீபத்திய இறையாண்மை மேம்படுத்தல் மற்றும் மறுசீரமைப்பைப் பின்பற்றுகிறது.
Fitch இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணய வழங்குனர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) 2024 டிசம்பர் 20ஆம் திகதி அன்று ‘CCC-‘ இலிருந்து ‘CCC+” ஆக உயர்த்தியது. இது இலங்கை வழங்குநர்களின் ஒப்பீட்டு கடன் தகுதியில் மாற்றங்களை பிரதிபலிக்கிறது. மக்கள் வங்கி மேம்பாடு வங்கியின் நிலைத்தன்மை, வலுவான செயல்பாட்டு செயல்திறன் மற்றும் தொடர்ச்சியான நிதி வலிமையைக் குறிப்பிடுகிறது.
Fitch மதிப்பீட்டின் தேசிய நீண்டகால மதிப்பீடுகளை ‘AA-(lka)’ஆக உயர்த்தியமைக்கு மக்கள் வங்கி வரவேற்பு தெரிவித்துள்ளதுடன் இது வங்கியின் உறுதியான நிதிநிலை மற்றும் இலங்கை பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. மேம்படுத்தல் வங்கியின் சிறந்த இடர் மேலாண்மை நடைமுறைகள், ஸ்திரத்தன்மை மற்றும் நிதி ஒழுக்கம் ஆகியவற்றை அங்கீகரிக்கிறது.
Fitchமதிப்பீட்டின் நம்பிக்கையான மதிப்பீடு மக்கள் வங்கியின் நிலைத்தன்மையையும் வளர்ச்சியையும் பேணுவது சிக்கலான சூழ்நிலைகளை வழிநடத்தும் வங்கியின் திறனுக்கு ஒரு சான்றாகும்.
இலங்கையின் முன்னணி உரிமம் பெற்ற வர்த்தக வங்கியாகிய மக்கள் வங்கி 3.0 டிரில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகிக்கிறது. 750 கிளைகள் மற்றும் சேவை மையங்களை கொண்ட நாட்டின் மிகப்பெரிய வங்கி வலையமைப்பான மக்கள் வங்கி 15.2 மில்லியனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குகிறது. மேலும் 7,300 பேர் கொண்ட பலமான பணியாளர்கள் குழுவுடன் 19.0 மில்லியனுக்கு மேற்பட்ட கணக்கு தொடர்புகளை நிர்வகிக்கிறது.
The post Fitch மதிப்பீடுகள் மக்கள் வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீட்டை ‘AA-(lka)’ஆக உயர்த்தியுள்ளது appeared first on Thinakaran.