Last Updated:
GPay Auto Pay Feature | Google Pay ஆப்பில் நாம் அனுப்பும் கட்டணங்களை ஒவ்வொரு முறையும் சென்று செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை ஆட்டோபே அம்சத்தை ஆக்டிவேட் செய்தால், ஒவ்வொரு முறையும் இந்த பரிவர்த்தனை ஆட்டோமேட்டிக்காக நடைபெறும்.
Google Pay மூலம் விரைவாக, எளிதாக மற்றும் பாதுகாப்பான வழியில் ஆன்லைனிலும் ஸ்டோர்களிலும் பணம் செலுத்தலாம். நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பணம் அனுப்பும் செயல்முறையும் எளிதாக மாறியுள்ளது. தற்போது லட்சக்கணக்கானோர் Google Pay ஆப்-பை பயன்படுத்தி வருகின்றனர். Google Pay (GPay) அதன் ஆட்டோ பே அம்சத்தின் மூலம் கட்டணங்களை நிர்வகிப்பதை எளிதாக்கியுள்ளது. இதன் மூலம் யூசர்கள் சந்தாக்கள், பில்கள் மற்றும் பல பரிவர்த்தனைகளை ஆட்டோமேட்டிக்காக நடத்த அனுமதிக்கிறது.
அதாவது Google Pay ஆப்பில் நாம் அனுப்பும் கட்டணங்களை ஒவ்வொரு முறையும் சென்று செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை ஆட்டோபே அம்சத்தை ஆக்டிவேட் செய்தால், ஒவ்வொரு முறையும் இந்த பரிவர்த்தனை ஆட்டோமேட்டிக்காக நடைபெறும். நீங்கள் உங்கள் ஆப்பில் சேமித்து வைத்திருக்கும் தரவுகளின் அடிப்படையில் இந்த செயல்முறை நடைபெறுகிறது.
இருப்பினும், இந்த ஆட்டோபே அம்சத்தை குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு நிறுத்த யூசர்கள் விரும்பலாம் என்றால், அதற்கும் ஆப்ஷன் உள்ளது. GPayல் ஆட்டோபே அம்சத்தை ரத்து செய்வது ஒரு எளிமையான செயல்முறையாகும். ஆனால், இதனை எப்படி செய்வது என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். இதன் மூலம் உங்கள் போனில் இருந்து ஆட்டோமேட்டிக்காக நடக்கும் பரிவர்த்தனைகளை நீங்கள் எளிதாக நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
GPayல் ஆட்டோ பே அம்சத்தை ரத்து செய்வது எப்படி?
- உங்கள் போனில் Google Pay ஆப்-பை திறந்து கொள்ளவும்.
- உங்கள் போனின் மேல் வலது மூலையில் உள்ள ப்ரொபைல் படத்தை க்ளிக் செய்யவும். இப்போது “ஆட்டோபே” என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
- பின்னர் உங்கள் ஆப்பில் உள்ள ஆட்டோமேட்டிக் கட்டண சந்தாக்களின் பட்டியலைக் காண்பீர்கள். அதில், நீங்கள் ரத்து செய்ய விரும்பும் குறிப்பிட்ட சந்தாவை கண்டறியவும்.
- இதனை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட சந்தாவிற்கு “ஆட்டோமேட்டிக் பேமண்ட்டை ரத்து செய்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதனை உறுதிப்படுத்த உங்களுக்கு ஒரு கோரிக்கை மெசேஜ் வரும், உங்கள் UPI பின்னை என்டர் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
- ரத்துசெய்தல் வெற்றிகரமாக முடிந்ததும், உறுதிப்படுத்திய செய்தியைப் பெறுவீர்கள்.
இதையும் படிக்க: யாருக்கும் தெரியாமல் விபிஎன் பயன்படுத்துபவரா நீங்க…? கூகுளின் பாதுகாப்பு அம்சம் இதுதான்..!
நினைவில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்:
ரத்து செய்யும் நேரம்: ரத்து செய்யும் தேதி வணிகரைப் பொறுத்து மாறுபடலாம். இதற்கு உங்கள் வணிகரைத் தொடர்பு கொள்ளவும். சில சந்தர்ப்பங்களில் Google Pay ஆப்பில், ஆட்டோமேட்டிக் பணம் செலுத்துதலை ரத்து செய்த பிறகும், சந்தாவை ரத்து செய்ய நீங்கள் வணிகரை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம்.
February 05, 2025 4:34 PM IST