நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளர் வாக்காளருக்காக அதிகபட்சமாக 115 ரூபா முதல் குறைந்தபட்ச தொகை 82 ரூபா வரை செலவழிக்கலாம் என நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அல்லது பபேரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி, கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் வாக்காளர்களுக்காக அதிகபட்சமாக பணத்தை செலவிட முடியும் என்றும், அந்த மாவட்டங்களில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 58 லட்சம் ரூபா செலவிட முடியும் என்றும், ஒரு கட்சிக்கு அந்த மாவட்டத்திற்காக அதிகபட்சமாக 600 லட்சம் ரூபா செலவிட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வன்னி தேர்தல் மாவட்டம் என்பது ஒரு வேட்பாளரால் ஆகக்குறைந்த தொகையை செலவிடக்கூடிய மாவட்டம் என்பதுடன், அந்த மாவட்டத்தில் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவருவருக்கு அதிகபட்சமாக சுமார் நான்காயிரம் ரூபா செலவிட முடியும்.
இந்த பொதுத் தேர்தலுக்காக ஒரு வேட்பாளர் குறிப்பிட்ட மாவட்டங்களில் செலவிடக்கூடிய ஆகக்கூடிய அதிகபட்ச தொகை, சம்பந்தப்பட்ட கட்சி அல்லது சுயேச்சைக் குழுவினால் செலவிடக்கூடிய ஆகக்கூடிய தொகை மற்றும் தேசியப் பட்டியலுக்கு நியமனம் செய்யப்பட்டவர்கள் செலவிடக்கூடிய ஆகக்கூடிய அதிகபட்ச தொகை என தேர்தல்கள் ஆணைக்குழு ஒழுங்குவிதிகளை முன்வைத்துள்ளது.