வாகனத்தை காப்பீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விடயங்கள் (insurance)

வாகனத்தை காப்பீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விடயங்கள் insuranceஇலங்கையில் நமது வாகனத்தை வீதிக்கு கொண்டு செல்வதற்கு முன் பல விடயங்களை பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இன்று நாம் கூறப் போவது அதுவல்ல. (காப்பீடு-insurance)

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எந்தவொரு வாகனத்தையும் சாலையில் போடுவதற்கு முன் மூன்று அடிப்படை அனுமதிப்பத்திரங்கள் / சான்றிதழ்கள் இருக்க வேண்டும். சில வாகனங்களுக்கு இதனைத் தவிர மேலதிகமாவும் இருக்கலாம். அவற்றுள் (இன்சூரன்ஸ் சர்டிபிகேட்) காப்புறுதி சான்றிதழ் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததும் அடிப்படையானதும் ஆகும்.

காரணம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டத்தின் மூலம் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது மட்டுமல்லாது, காப்பீடு என்று குறிப்பிடப்படும் insurance செய்வதற்கு முன் அதைப் பற்றி சிந்திப்பதற்கும், ஆராய்வதற்கும் பல விடயங்கள் காணப்படுகின்றன.

நீண்ட காலமாக இதனைப் பற்றி எதனையும் அறிந்து கொள்ளாமல் insurance செய்தவர்களும், இனிமேல் insurance செய்ய உள்ளவர்களும் தங்கள் வாகனத்தை insurance செய்வதற்கு முன் இந்த விடயங்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பார்பது நல்லது.

01. Full or Third Party?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் Full என்றால் என்ன Third Party என்றால் என்ன என்று சொன்னதும் புரிந்திருக்கும். ஆனால் பலருக்கு இதை பற்றிய விவரம் சரியாகத் தெரியாது. இருப்பினும், வாகனத்திற்கான insurance ஐ பெறும்போது முதலில் சிந்திக்க வேண்டியது இதை தான்.

சில காலத்திற்கு முன்பு, Full மற்றும் Third Party தவிர, மேலும் ஓரிரு பிரிவுகள் இருந்தன, ஆனால் தற்போது அவைகள் ஏதும் இல்லை. இதைப் பற்றி கூறுவதற்கு முன் இதனைப் பற்றிய சட்ட விடயமொன்றைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

காப்பீட்டில் மூன்று தரப்பினர் உள்ளனர். முதல் தரப்பினர் காப்பீடு செய்தவர். இரண்டாவது தரப்பு காப்பீட்டு நிறுவனம். மூன்றாம் தரப்பினர் என்பது காப்பீட்டு ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்ட மற்ற விடயங்கள் மற்றும் நபர்கள். (வாகன insurance விடயத்தில், சாலையில் இருப்பவர்கள் மற்றும் அனைத்து சொத்துக்களுக்கும்) இப்போது மூன்றாம் நபர் காப்பீடு என்றால் என்ன என்று சற்று புரிந்திருக்கும்.

அதாவது, நீங்கள் மூன்றாம் நபர் காப்பீட்டைப் பெற்றால், உங்கள் வாகனம் அல்லது வாகனத்தில் உள்ளவர்கள் காப்பீடு செய்யப்பட மாட்டார்கள். ஆனால் முழு (Comprehensive) விரிவான காப்பீட்டில் அப்படி இல்லை. உங்கள் வாகனம், வாகனத்தில் பயணிப்பவர்கள், மற்றும் மூன்றாம் தரப்பினரின் உயிர்கள், சொத்துக்கள் ஆகியவை பாதுகாக்கப்படும். எனவே, காப்பீடு பெறுவதற்கு முன் தீர்மானிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம் இதுவாகும்.

எந்த இழப்பையும் ஈடுசெய்யும் அளவுக்கு உங்களிடம் போதுமான பணம் இருந்தால், மூன்றாம் தரப்பு காப்பீடு போதுமானது.

02. வாகனத்தின் பயன்பாடு

வாகனம் எந்த வகையான விடயங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றது என்பதும் காப்பீடு செய்வதற்கு முன் யோசிக்க வேண்டிய ஒரு விடயமாகும். உதாரணமாக, வாகனம் தனது தனிப்பட்ட பயணத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை தீர்மானிக்க வேண்டும். இதை தவிர இன்னும் இரண்டு சந்தர்ப்பங்கள் உள்ளன. அதாவது ஒன்று ஹயர் பண்னுவது அடுத்து வாடகைக்கு விடப்படுவது.

எனவே, காப்பீட்டை வாங்கும் முன், குறித்த மூன்று சந்தர்பங்களில் எது உங்களுக்குப் பொருத்தமானது மற்றும் அவசியமானது என்று தீர்மானிக்க வேண்டும்.

தனிப்பட்ட காப்பீட்டை மட்டும் பெற்று ஹயர், வாடகை விடப்பட்டதன் பின் விபத்து ஏற்பட்டு காப்பீட்டு நிறுவனத்தினால் தனது கோரிக்கை நிராகரிக்கப்படும் போது குறித்த காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள அவர்களின் அம்மா மற்றும் பாட்டியை நினைவுபடுத்துவது பயனற்றது.

மற்ற விடயம் என்னவென்றால், நீங்கள் ஒரு ஹயர் காப்பீடு பெற்றால், தனிப்பட்ட பயன்பாடு சாத்தியமில்லை என்று எதுவும் கிடையாது. அதே போல் நீங்கள் வாடகை காப்பீடு எடுத்தால், நீங்கள் அதை தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் பயன்படுத்தலாம் அல்லது ஹயர் மற்றும் வாடகைக்கும் பயன்படுத்தலாம். ஆனால் தனிப்பட்ட காப்பீட்டை விட வாடகை காப்பீடானது பெறுமதி அதிமானது.

03. ஒரே தடவையில் செலுத்த வேண்டுமா?

சில காப்பீட்டு நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை வருடத்திற்கான தொகையை செலுத்த வேண்டும். சில காப்பீட்டு நிறுவனங்கள் பணம் செலுத்துவதற்கு சிறிது தவனைக் காலம் கொடுக்கிறார்கள். எனவே, காப்பீடு என்பது ஒரு செலவு சம்பந்தப்பட்ட விடயம் என்பதால், அதைச் செலுத்துவதற்கு சலுகைக் காலம் கொடுக்கும் நிறுவனங்களாக இருப்பின் நல்லது.

அத்துடன் குறித்த சலுகை காலத்திற்குள் உங்களால் பணம் செலுத்த முடியாவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

வாகனத்தை காப்பீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விடயங்கள் 0304. நிபந்தனைக்குட்பட்டது (தானா?)

பல insurance நிறுவனங்கள் பெரிய விளம்பரங்களைப் காட்சிப்படுத்துவதுடன், *நிபந்தனைகளுடன்* என்ற சொல்லை மாத்திரம் கண்ணுக்குத் தெரியாத அளவில் மறைமுகமாக போடுகின்றன. எனவே வானத்தை காப்பீடு செய்வதற்கு முன் அந்த நிபந்தனைகள் என்ன என்பதையும் நீங்கள் கண்டறிந்து கொள்ள வேண்டியுள்ளது.

வாகனத்திற்கு வாகனம் தருகிறோம் என்று கூறினாலும் அப்படி கொடுப்பது சைக்கிள் ஒன்றா என்று நமக்கு தெரியாதல்லவா? ஏனெனில் சைக்கிள் என்பதும் வாகனம் தான். பெரும்பாலும், நிபந்தனை சரத்திற்குள் லாவமாக உட்புகுத்தி தான் இவ்வாறான தில்லு முல்லு வேலைகளைப் பார்க்கின்றனர். அதனால் எல்லா நிபந்தனைளையும் தேடிப்பார்த்த பின்னர் தான் நாம் காப்பீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.

05. எப்படி க்ளைம் செய்வது

வாகனத்திற்கு முழு காப்பீடு வைத்திருக்கும் அனைவரினதும் மொத்த எதிர்பார்ப்பு விபத்து ஏற்பட்டால் ஒரு பைசா கூட செலுத்தாமல் காப்பீட்டில் இருந்து மொத்தமாக க்ளைம் பெறுவதுதான்.

எனவே, விபத்து நடந்த இடத்தில் இருந்து க்ளைம் பெறும் இடம் வரையிலான அனைத்து நடைமுறைகள் குறித்தும் மிகவும் கவனமாக தேடிப்பார்க செய்ய வேண்டும். அவை எமக்கு பொருத்தமானதாக இருந்தால் பிரச்சனை இல்லை.

எவ்வளவு சரி பணம் வெட்டிகிட்டாலும் பரவாயில்லை சீக்கிரம் பணம் கொடுத்தால் போதும் என்று சிலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலர் மொத்த தொகையையும் தருவதாக இருந்தால் பணத்தை தருவதற்கு தாமதமாகினாலும் பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். எனவே நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள் என்று யோசித்து, உங்களுக்கு ஏற்ற இடத்தைத் தேடுங்கள்.

வாகனத்தை காப்பீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விடயங்கள் 0206. மேலதிக பாதுகாப்பு

காப்பீடு ஒன்று பெற்றதன் காரணமாக அதன் மூலம் அனைத்து நிலமைகளிலும் பாதுகாப்பு தரப்படும் என எண்ணிவிடக் கூடாது. காப்பீட்டில் அடிப்படை பாதுகாப்பு (பேசிக் கவர்) என்று உள்ளது. இதில் பொதுவாக காப்பீட்டிற்கு உற்படுவது சாலையில் நடக்கும் வாகன மோதல்கள் அல்லது பிற மோதல்களால் ஏற்படும் விபத்துகளை மட்டும் ஆகும்.

எனினும் நீங்கள் விரும்பினால் பெற்றுக் கொள்ளக்கூடிய மேலதிக காப்பீட்டு கவர்கள் உள்ளன. உதாரணமாக இயற்கை பேரிடர் காப்புறுதி, இயற்கை பேரிடர் காப்புறுதி, விஷேட வின்ட்ஸ்கிரீன் காப்புறுதி, டோவிங் கட்டண காப்புறுதி, சாரதி பயிற்சி காப்புறுதி போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் காப்புறுதி வகைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கலாம். எனவே காப்பீடு செய்வதற்கு முன் இதனைப் பற்றியும் அறிந்து கொள்வது சிறந்தது.

07. மேலதிக சேவைகள்

அதையெல்லாம் யோசித்துவிட்டு கடைசியாக யோசிக்க வேண்டியது இதுதான். இங்கு குறிப்பிடப்படுவது அந்தந்த காப்பீட்டு நிறுவனத்தால் உங்களுக்கு என்று வழங்கப்படும் குறிப்பிட்ட விக்ஷேட சேவைகள் பற்றியதாகும்.

நாம் அனைவரும் அறிந்தபடி கூறுவதென்றால் (ஏஜன்ட்) முகவர்களைப் பற்றியதாகும். ஏஜென்ட்கள் என்று சொன்னால் போதும் சிலருக்கு கோபம் தலைக்கேறி விடும். ஆனால் சிலர் முகவர்கள் பணம் செலுத்த முடியாது என்று நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகளையும் எடுத்துக்கொள்கிறார்கள்.

இது நீங்கள் பெற்றுக் கொள்ளும் அல்லது தேர்ந்தெடுக்கும் முகவரைப் பொறுத்தது. எந்த காப்பீட்டு நிறுவனத்திலும் திருடர்கள் இருக்கலாம். அதே போல் நேர்மையாக சேவை செய்பவர்களும் இருக்கலாம்.

எனவே, உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் அவர்களால் பரிந்துரைக்கப்படும் நல்ல முகவர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறியவும்.

இவையெல்லாம் யோசித்து ஆராய்ந்து insurance ஒன்றை பெற்றுக் கொண்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அத்துடன் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டது என்று ஒதுங்கி நிற்காமல், உங்கள் அருகில் உள்ள குறிப்பிட்ட காப்புறுதிக் கம்பெனியின் கிளையில் பணிபுரியும் ஒருவருடன் சிறு நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக (க்ளேம் ஹன்ட்ல்) காப்பீட்டை கையாளுபவரைப் போன்ற ஒருவர்.

அடுத்து காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, ​​அந்த நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எழுத்துப்பூர்வமாக பெற்றுக் கொள்ளுங்கள். அதை POLICY DOCUMENT என்று அழைப்பார்கள். எந்த நிறுவனத்திற்கும் அதனைக் கொடுக்காமல் இருக்க முடியாது.

அதன் பிறகு, வீட்டிற்குச் சென்று, உங்களிடன் சொன்னதையும் நீங்கள் கேட்டுக் கொண்ட விடயங்களையுமா உள்ளடக்கியிருக்கிறார்கள் என்று பொறுமையாக படித்துப் பாருங்கள்.


SARINIGAR WM

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!