பேஸ்புக் (Facebook) கணக்கை உருவாக்குவது எப்படி? 0

பேஸ்புக் (Facebook) கணக்கை உருவாக்குவது எப்படி?Facebook பேஸ்புக் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான சமூக வலைதளமாகும். Facebook என்பது பிப்ரவரி 4, 2004 இல் தொடங்கப்பட்ட ஒரு சமூக வலைப்பின்னல் சேவையாகும்,
2.96 பில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களுடன், Facebook உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளமாக திகழ்கின்றது.

நீங்கள் இதுவரை Facebookகை பயன்படுத்தவில்லை எனில், உங்களுக்கு Facebookகில் புதியதாக கணக்கை தொடங்குவது எப்படி என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது மிகவும் எளிமையானதுதான்.

தேவையான அனைத்து தகவல்களையும் பிரதான Facebook பக்கத்தில் உள்ளிட்டு, ஓரிரு நிமிடங்களில் புதிய கணக்கை உருவாக்கலாம்.

உங்கள் புதிய கணக்கைப் பெற்றதும், நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும், செய்திகளை அனுப்பவும், வீடியோக்களைப் பதிவேற்றவும், புகைப்படங்களை பகிரவும், குழுவில் சேரவும், தகவல்களை் பறிமாறவும் மற்றும் செயல்பாடுகளை கண்டறியவும் இதைப் பயன்படுத்தலாம்.

இந்தக் கட்டுரையில், Facebook இணையதளத்தைப் பயன்படுத்தி அல்லது உங்கள் Iphone, iPad அல்லது Android சாதனத்தில் மொபைல் APPஐ பயன்படுத்தி புதிய Facebook கணக்கை எவ்வாறு தொடங்குவது என்பது பற்றி பார்கலாம்.

தற்பொழுது Facebookகில் விதிக்கப்பட்ட விதிமுறைகளின்படி 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அதில் கணக்கை உருவாக்க முடியும்.

 

கணினியில் Facebook கணக்கை உருவாக்குவது எப்படி?

••• கணினியில் Facebook கணக்கை உருவாக்க கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்

உங்கள் கணினியில் உள்ள browser இல் Facebook என Type செய்து Search செய்து கொள்ளுங்கள். பின்பு வரும் பக்கத்தில் முதலாவதாக உள்ள Facebook என்பதை கிளிக் செய்யுங்கள்.

பேஸ்புக்

 

படி 1: Facebook.comஐத் திறந்து ‘Create new account’ என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 2: அடுத்து வரும் பக்கத்தில் உள்ள Create an account என்பதற்கு கீழே உள்ள “First name” என்பதில் கிளிக் செய்து உங்களின் பெயரை உள்ளிடுங்கள்.

படி 3: அதற்கு அடுத்து உள்ள “Surname” என்பதில் உங்களின் அப்பா பெயர் அல்லது நீங்கள் விரும்புகிற பெயரை உள்ளிடுங்கள்.

படி 4: அடுத்துவரும் கட்டத்தில் உங்களின் Phone number அல்லது Email id ஐ உள்ளிடுங்கள் .

படி 5: அதற்கு அடுத்து உள்ள “New password” என்பதில் உங்களுக்கு விருப்பமான password ஐ உள்ளிடுங்கள்.

படி 6: அதற்கு அடுத்து Date of birth என்பதில் உங்களின் பிறந்த தேதியினை உள்ளிடுங்கள்.

படி 7: அதற்கு அடுத்து உள்ள Gender என்பதில் நீங்கள் ஆணாக இருந்தால் ஆண் என்பதனையும் பெண்ணாக இருந்தால் பெண் என்பதையும் மூன்றாம் பாலினத்தவர் ஆக இருந்தால் Custom என்பதையும் கிளிக் செய்யுங்கள்.

படி 8: அதற்கு அடுத்ததாக “Sign up” என்பதை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடன் புதியதாக இன்னொரு Screen -க்கு செல்லும். அதில் ” An activation link has been sent to your email account” என வரும்.

உடனே உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உறுதிப்படுத்தல் குறியீடு அனுப்பப்படும். அந்தக் குறியீட்டை உள்ளிட்டு உங்கள் Facebook கணக்கில் உள்நுழைவீர்கள்.

மொபைல் போனில் Facebook கணக்கை உருவாக்குவது எப்படி?

••• மொபைல் போனில் Facebook கணக்கை உருவாக்க கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்.

 

படி 1: முதலில் உங்கள் மொபைலில் Facebook செயலியைப் பதிவிறக்கவும்.
படி 2: அதன்பின் Appஐத் திறந்து ‘Register’ அல்லது “Create Account” என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 3: உங்கள் முதல் பெயர் மற்றும் கடைசி பெயரை உள்ளிடவும்.
படி 4: உங்கள் பிறந்தநாளை உள்ளிடவும்.
படி 5: உங்கள் பாலினத்தை உள்ளிடவும்
படி 6: உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு, Facebook அனுப்பும் “text code” மூலம் உங்கள் கணக்கைச் சரிபார்க்கவும்
படி 7: உங்கள் கடவுச்சொல்லை உருவாக்கவும்
படி 8: “Register” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

Facebook கணக்கு உருவாக்கும் செயல்முறையை முடிக்க, உங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வளவு தான். இப்போது உங்களுக்கான Facebook கணக்கு துவங்கப்பட்டு விட்டது. இனி நீங்கள் Facebookனுள் நுழைந்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.


SARINIGAR WM

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!