தற்காலத்தில் CCtv கேமராக்கள், Home Security Systems, என பல்வேறு தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டாலும் திருடர்கள், எதிரிகளின் ஆபத்துகள் அப்படியே இருக்கின்றன.
சில திருட்டு சம்பவங்களுக்கு நமது கவனக்குறைவான செயற்பாடுகளும் காரணமாக அமைகின்றது. அத்துடன் சிசிடிவி போன்ற பாதுகாப்பு சாதனங்களை வாங்கி அவற்றை பராமரிக்கும் அளவிற்கு நம் அனைவருக்கும் வசதிகளும் கிடையாது.
அதனால் தான், திருடர்களிடமிருந்து உங்கள் வீட்டைப் பாதுகாக்க நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான சில எளிய விடயங்களைப் பற்றி உங்களுக்குச் சொல்ல நினைத்தோம்.
01. விலையுயர்ந்த, பெறுமதிமிக்க பொருட்களை வீட்டில் மற்றும் முற்றத்தில் தெரியும்படி வைக்காதீர்கள்!
நமக்குத் தெரிந்தவர்களைப் போலவே தெரியாதவர்களும் நம் வீட்டுக்கு வரும் சந்தர்ப்பங்களும் உண்டு. நமக்கு தெரிந்தவர்கள்ளுடன் தெரியாதவர்களும் வரும் சந்தர்ப்பங்களும் உண்டு.
அதே போல், பல்வேறு பழுது பார்க்கும் வேலைகளுக்கு, பொருட்களை விற்பனை செய்வதற்கு, பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு, உதவி உபகாரங்களை எதிர்பார்த்து என பல விதங்களில் நம் வீடுகளுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் வருகின்றனர்.
ஆக வீட்டிற்கு வரும் அனைவர் மீதும் எமக்கு சந்தேகத்துடன் பார்க்க முடியாதல்லவா, எனவே நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதனால், பெறுமமதி மிக்க பொருட்களை யாரும் பார்க்கக்கூடிய இடத்தில் கண்ட நின்ற இடங்களில் வைக்காமல் பத்திரமாக வைக்க வேண்டும்.
அது உங்கள் மதிப்புமிக்க கடிகாரமாக இருக்கலாம், வளையல் அல்லது மோதிரம் போன்ற நகைகளாக இருக்கலாம், பெறுமதி மிக்க இலத்திரனியல் உபகரணங்களாக இருக்கலாம் அல்லது உங்கள் குழந்தையின் விலையுயர்ந்த பொம்மையாகக் கூட இருக்கலாம்.
திருடர்கள் எப்போதும் பணத்தையும் தங்கத்தையும் மட்டும் திருட வருவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அசட்டுத்தனமாக இருக்காமல் பெறுமதி மிக்க பொருட்களை பொருத்தமான இடங்களில் வைக்கவும்.
02. அக்கம் பக்கத்திலுள்ள அயலவர்களுடன் நல்லுறவைப் பேணுங்கள்
இது நம் மக்கள் சிந்திக்காத ஒரு விடயமாகும். இப்போது, மக்களின் வாழ்க்கை பழக்க வழக்க முறையின்படி, அவர்கள் தமது அண்டை வீட்டாரைத் பொதுவாக தவிர்க்கிறார்கள். ஒரு வகையில் இதில் தப்பும் கூற முடியாது.
இருப்பினும், மிகவும் நெருக்கமாக பழக முடியாவிட்டாலும் நீங்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய சில அண்டை வீட்டாருடன் நல்ல உறவை பேணிக் கொள்வது சிறந்தது. அக்கம் பக்கத்து ஆண்டிமார்களிடம் சிசிடிவி கேமராக்களும் தோற்றுப் போகும் என்று இப்போதெல்லாம் பேச்சிக்கு சொல்கிறோமில்லையா.
அந்த விடயம் உங்கள் வீட்டின் பாதுகாப்பிற்கும் அவசியமானதாக உள்ளது. வௌியே எங்காவது பயணம் செல்லும் போது ‘எங்கள் வீட்டையும் கொஞ்சம் பார்த்துகங்க ஆண்டி’ என்று கூறியாவது நிம்மதியாக செல்லலாம்.
நீங்கள் அயலவர்களுடன் தலைக்கனம் பிடித்தார் போல் திமிராக, மிடுக்காக நடந்து கொண்டால் உங்கள் வீட்டிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான ஏதாவது நடந்தால் கூட, அக்கம்பக்கத்தினர் உங்களுடன் அதைப் பற்றி பேசத் தயங்குவார்கள்.
03. வீட்டின் கதவு பூட்டுகளை சரிபார்க்கவும்
வீட்டின் வெளிப்புறமாகவும் உற்புறமாகவும் நன்றாக சோதித்துப் பாருங்கள். உங்கள் கதவுகள் அல்லது ஜன்னல்கள் தொய்வடைந்து, சரியான முறையில் இயங்காமல் உள்ளதா என்பதைப் பார்க்கவும். கதவு, யன்னல் பூட்டியிருந்தாலும் இரும்பு கம்பியால் திறக்க முடியுமா என்று பாருங்கள்.
மேலும், ஜன்னல்களுக்கு கிரில்களை நிறுவுவதும், அவற்றில் சரியான பூட்டுகளைப் பயன்படுத்துவதும் கட்டாயமாகும். இப்போது மிகவும் பாதுகாப்பான நவீன கதவு பூட்டுகள் உள்ளன.
ஹாற்ட்வெயார்க்குச் சென்று அவற்றைப் பற்றி அறிந்து, மிகவும் பாதுகாப்பானவற்றை வாங்கி பயன்படுத்துங்கள்.
அதே போல் புதிதாக ஒரு கூலி வீட்டிற்கு சென்றால் கூட இதற்கு முன்னர் அந்த வீட்டில் பலர் தங்கியிருந்திருப்பதால் அந்த வீட்டின் கதவுகளுக்கு புதிய பூட்டுகளை வாங்கிப் போடுவது சிறந்ததாகும். இது பற்றி உங்கள் வீட்டு உரிமையாளர்களிடம் பேசுங்கள்.
04. வீட்டைச் சுற்றியுள்ள சூழலபை் பற்றியும் கவனம் செலுத்துங்கள்
உங்கள் வீட்டிற்கு திருடன் வந்தால் அவன் எப்படி வருவான், எந்த வழியாக வருவான் என்பதை வீட்டையும், தோட்டத்தையும் சுற்றிப் பார்த்து நன்றாக அறிந்து கொள்ளுங்கள்.
வீட்டிற்கு வௌியிலிருந்து பார்க்கும் போது வீட்டின் உடபுறம் வௌியாட்களுக்கு எப்படித் தெரிகிறது என்று பாருங்கள். ஜன்னல் வழியாக வீட்டிற்குள் மக்கள் இருக்கிறார்களா? மதிப்புமிக்க பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்று பாருங்கள். வீட்டைச் சுற்றிலும் திருடனுக்கு ஔிந்து கொள்ளக் கூடியவாறு புதர்கள், பற்றைகள் இருக்கிறதா என்று பாருங்கள்.
வீட்டில் மேல் மாடி இருந்தால், அதை நோக்கி உயரமான மரங்களின் கிளைகள் உள்ளதா என பார்க்கவும். ஏனென்றால் ஒரு திருடனுக்கு மரத்தின் கிளைகளில் ஊர்ந்து உங்கள் வீட்டிற்குள் நுழைய முடியும்.
05. திருடர்களுக்கு வீட்டைப் பற்றிய விபரங்ளைப் பெறக் கூடிய வழிகளை தடுக்கவும்.
ஒரு வீட்டில் மக்கள் அடிக்கடி தங்குவதில்லை என்பதை திருடகள் அறிந்து கொள்ளக்கூடிய முக்கிய வழி தான் அந்த வீட்டிற்கு வரும் கடிதங்கள் மற்றும் பில் பட்டியல்கள்.
இவை தபால் பெட்டிகளிலும், வீடுகளின் முன் படிக்கட்டுகளிலும், வாசலுக்கு அடியிலும், பல நாட்களாக கவனிப்பாறின்றி கிடக்கும் போது, வீட்டில் யாரும் தங்குவதில்லை என்பதை திருடர்கள் இலகுவாக நோட்டமிடுவார்கள். சிலர் வீட்டில் இருந்தாலும் சலிப்பினால் இவைகளை அப்படியே விட்டு விடுகிறார்கள். அப்படி செய்ய வேண்டாம்.
மேலும், நீங்கள் வீட்டிற்கு கொண்டு வரும் பெறுமதி மிக்க பொருட்களின் பெட்டிகளை உங்கள் முற்றத்திலோ அல்லது கேரேஜிலோ அனைவரும் பார்க்கும்படி குவித்து வைக்காதீர்கள்.
ஒரு அறிவார்ந்த திருடர்க்கு அவை நல்ல குறிப்புகள். எனவே, அத்தகைய பொருட்களை மடித்து, பொருத்தமான இடத்தில் வைக்கவும். இல்லையெனில், அதை கிழித்து வீட்டில் இருந்து அகற்றவும்.
06. வீடு மற்றும் முற்றத்தில் விளக்கு வௌிச்சம்
வீட்டையும் அதன் சுற்றுப் புறத்தையும் நன்றாக சோதித்து அறிந்து வையுங்கள் என்று முன்பே சொன்னோம். அதே சமயம் இந்த விடயத்தைப் பற்றியும் சற்று தேடிப் பாருங்க். வீட்டைச் சுற்றி சரியாக வெளிச்சம் இருக்கிறதா? வீடு மற்றும் முற்றத்தில் இருண்ட இடங்கள் உள்ளனவா? என்று பாருங்கள்.
அது போன்ற இடங்களில் மின் விளக்குகள் பொருத்தி வௌிச்சம் படும்படியாக மாற்றுங்கள். அதே போல் பல நாட்கள் வீடு இருளில் கிடந்தால் அதன் மூலமாகவும் வீட்டில் யாரும் இல்லை என்பதை திருடர்கள் அறிந்து கொள்கின்றனர்.
எனவே, தாமதமாக வீட்டிற்கு வரக்கூடிய நாட்களில் அல்லது வீட்டிற்கு வெளியே சில நாட்கள் தங்கியிக்க வேண்டிய நிலமை ஏற்பட்டால் வீட்டில் சரியாக எரியக்கூடிய குறைந்தபட்சம் ஒரு விளக்கையாவது எரிய வைப்பது அவசியம்.
இப்போது ஸ்மார்ட் போன் மூலம் வீட்டில் உள்ள மின் விளக்குகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் உள்ளன, அதே போல் வீட்டில் உள்ள விளக்குகளை டைமர்கள் மூலம் சரிசெய்யலாம். அதே போல் மோஷன் சென்சார் தோட்ட விளக்குகள் (Garden Motion Sensor Lights) மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் விளக்குகள் உள்ளன.
இதுபோன்ற விடயங்களை கையான்டு பார்க்கலாம். இந்த தொழில்நுட்ப சாதனங்கள் கொஞ்சம் மேஜிக் போல இருந்தால், நீங்கள் நம்பும் ஒருவரிடம் வீட்டு சாவியை கொடுத்து மாலையில் வீட்டிற்கு சென்று விளக்குகளை ஏற்றி வரச் சொல்லலாம்.
07. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கவனமாக இருங்கள்
சிலர் தான் எங்கு நிற்கின்றோம் என்று கூட கவனிக்காமல் தொலைபேசி அழைப்புகளில் தாம் போகும் பயணங்களைப் பற்றி நாட்டுக்கே கேட்கும் அளவிற்கு சத்தமிட்டு கூவிக்கொன்டிருப்பார்கள்.
தொலைதூரப் பயணங்களுக்குச் சென்று உடனே பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவார்கள். உலகிற்கே அறிவித்து விட்டு சுற்றுலா செல்வது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். நீங்கள் வீட்டில் இருக்கப் போவதில்லை என்பதை திருடர் களுக்கு நீங்களே அறிவிக்கின்றீர்கள்.
இவை மிகவும் முட்டாள்தனமான விடயங்கள். தான் அதிக நாட்கள் வீட்டை விட்டு வெளியே இருக்க நேரிட்டால், அதைப் பற்றி தானும் அவசியமென்றால் தனக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள் மாத்திரம் தெரிந்து கொண்டால் போதும்.
அதனைத் தான்டி, மற்ற நபர்கள் இவைகளைப் பற்றி அறிவது ஆபத்தாக அமையலாம். உங்களுக்குத் தெரியாத டாக்ஸியில் பயணம் செய் நேரிட்டால், வீட்டை விட்டு வெளியே வரும்போது சுற்றிலும் ஆட்கள் இருந்தாலும் வீட்டில் இன்னும் யாராவது இருப்பதாக கூறிவிட்டு செல்லுங்கள்.
உதாரணத்திற்கு, அப்படிப்பட்ட சந்தர்பத்தில் சும்மா ஒரு போன் கால் எடுத்து, “தம்பி, எனக்கு அறையில் மின்விசிறியை அணைக்க மறந்துவிட்டேன், அதை கொஞ்சம் பார்த்து ஆஃப் பண்ணிடுபா” என்று எதையாவது அக்கம் பக்கதிலிருப்பவர்களுக்கு கேட்கும்படி கூறுங்கள்.
சரி இந்த கட்டுரையின் மூலம், திருடர்களிடமிருந்து உங்கள் வீட்டைப் பாதுகாத்துக் கொள்ள உங்களால் செய்ய முடியுமான சில எளிய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளோம். இந்தக் கட்டுரையில் CCTV பாதுகாப்பு அமைப்பு போன்ற விடயங்களைப் பற்றி நாம் குறிப்பிடவில்லை. அதைப் பற்றி இன்னுமொரு கட்டுரையில் விரிவாக பார்கலாம்.
அதே போல் ஒருவருக்கு சொல்ல முடியும் எங்க வீட்டுக்கு வந்து திருடனுக்கு என்ன தான் இருக்குது தூக்கிட்டு போறதிற்கு என்று… பெறுமதியான பொருட்கள் வீட்டில் இல்லை என்றாலும் எந்த வித அச்சமும் தயக்கமுமின்றி வௌியாட்களுக்கு உங்களது வீட்டிற்கு நுழைய முடியுமென்றால் அது அவ்வளவு தூரம் நல்ல விடயமல்ல.
Reezah Jasmin
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!