2024 மகளிர் T20 உலகக் கோப்பைக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.
முதல் சுற்று ஆட்டங்கள் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுகளில் நடைபெறும். ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன.
‘பி’ பிரிவில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பங்களதேசம், ஸ்காட்லாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.
பங்களாதேஷில் குறித்த போட்டிகளை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அந்நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் பிரச்சினைகள் காரணமாக போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) முடிவு செய்தது.
இந்த போட்டி துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பு 10 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும்.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 3-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பங்களதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் மோதும் முதல் போட்டி ஷார்ஜாவில் அக்டோபர் 3-ம் தேதி நடக்கிறது. அதே நாளில் ஷார்ஜாவில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.