நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சில வழக்கு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி சம்பவம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட கடந்த காலங்களில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றச்செயல்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய 2015 திறைசேரி பிணைமுறி விவகாரம் தொடர்பான விசாரணைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள், தினேஷ் ஷெப்டரின் தற்கொலை தொடர்பான விசாரணைகள், 2007 ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்த பேராசிரியர் ரவீந்திரநாத் சுப்பிரமணியம் காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள், 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வெலிகம பொலிஸ் நிலையத்தில் W15 ஹோட்டலுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகள், தர்மரட்ணம் சிவராம் என்ற ஊடகவியலாளர் 2005 ஆம் ஆண்டு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக கடத்தப்பட்ட சம்பவம் மற்றும் 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போன லலித்குமார் மற்றும் குகன் முருகநாதன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறும், அதன் முன்னேற்றத்தை விரைவில் சமர்ப்பிக்குமாறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி பொலிஸ் ஆணையாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!