IPL 2025; பூரனின் அதிரடியுடன் ஹைதராபாத்தை வீழ்த்திய லக்னோ!

ஹைதராபாத் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 2025 இந்தியன் பிரீமியர் லீக்கின் ஏழாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீச்சை தேர்ந்தெடுத்த ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணிக்கு ஷர்துல் தாக்கூரின் நான்கு விக்கெட்டுகள் ஹைதராபாத் அணியை ஒன்பது விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த உதவியது.

சன்ரைசர்ஸ் அணிக்காக டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 28 பந்துகளில் 47 ஓட்டங்களை எடுத்தார், அதே நேரத்தில் நிதிஷ் குமார் ரெட்டி (32), ஹென்ரிச் கிளாசென் (26), மற்றும் அனிகேத் வர்மா (36) ஆகியோர் அணிக்காக பயனுள்ள பங்களிப்பை வழங்கினர்.

லக்னோ அணிக்காக, ஷர்துல் தாகூர் (4/34) சிறப்பான பந்து வீச்சாளராக இருந்தார், அவேஷ் கான் (1/45), திக்வேஷ் ரதி (1/40), பிரின்ஸ் யாதவ் (1/29), மற்றும் ரவி பிஷ்னோய் (1/42) ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

190 ஓட்ட சேஸிங்காக துடுப்பெடுத்தாடிய லக்னோ அணிக்கு நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 70 ஓட்டங்களை விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தார்.

இவர் தவிர தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் 52 ஓட்டங்களை எடுத்து, 16.1 ஓவர்களில் 193/5 என்ற ஓட்டங்களை எடுத்தது 2025 ஐ.பி.எல். சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பேட் கம்மின்ஸ் (2/29), மொஹமட் ஷமி (1/37), அடம் ஜாம்பா (1/46) மற்றும் ஹர்ஷல் படேல் (1/28) ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஷர்துல் தாகூர் தெரிவானார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அடுத்த போட்டி ஏப்ரல் 1 அன்று பஞ்சாப் கிங்ஸுடன் லன்னோவில் நடைபெறவுள்ளது.

Image

நன்றி

Leave a Reply

error: Content is protected !!