1947 இல் இலங்கையின் பிரதம அமைச்சர் பதவி நிறுவப்பட்டது. 1978 வரை, அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் காணப்பட்டார்.
1978 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜே.ஆர். ஜயவர்தன அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொண்டார். அதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. பின்னர் அரசாங்கத்தின் தலைவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும், பிரதமர் பதவி ஒரு சாதாரண பதவியாகவும் மாற்றியமைக்கப்பட்டது.
இலங்கையின் புதிய அரசியலமைப்பின் கீழ் பிரதமர் அமைச்சரவையின் தலைவராகவும், பிரதி ஜனாதிபதியாகவும் காணப்படுகின்றார். ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது இறந்தால், புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை பிரதமர் ஜனாதிபதியின் பதவியை ஏற்றுக்கொள்வார். 1993 இல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதை தொடரந்து அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரை அப்போதைய பிரதமர் டிங்கிரி பண்டா விஜேதுங்க ஜனாதிபதியாக கடமையாற்றினார்.
01 – D.S. சேனாநாயக
– 1947 செப்டம்பர் 24 தொடக்கம் 1952 மார்ச் 22 வரை
இலங்கையின் முதலாவது பிரதமர். இவரது பதவிக் காலத்தில் நாடு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சுதந்திரம் பெற்றது.
02 – டட்லி சேனாநாயக
– 1952 மார்ச் 26 தொடக்கம் 1953 ஒக்டோபர் 12 வரை
தனது தந்தையார் டி.எஸ்.சேனநாயக்கவின் மறைவைத் தொடர்ந்து பிரதமராக நியமிக்கப்பட்டார். ஜூன் 1952 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றது, மேலும் அவர் மீண்டும் நியமிக்கப்படாமல் பதவியில் தொடர்ந்தார். டட்லி சேனநாயக்க 1953 இல் பதவி விலகினார்.
03 – சார் ஜோன் கொதலாவல
– 1953 ஒக்டோபர் 12 தொடக்கம் 1956 ஏப்ரல் 12 வரை
ஜோன் கொத்தலாவல தலைமையில் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது.
04 – S.W.R.D. பண்டாரநாயக
– 1956 ஏப்ரல் 12 1959 செப்டம்பர் 261959 செப்டம்பர் 26 வரை
பண்டாரநாயக்க நாட்டின் உத்தியோகபூர்வ மொழியை ஆங்கிலத்திலிருந்து சிங்களத்திற்கு மாற்றினார். அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன்பே அவர் படுகொலை செய்யப்பட்டார்.
05 – விஜயாநன்த தஹனாயக
– 1959 செப்டம்பர் 26 தொடக்கம் 1960 மார்ச் 20 வரை
S.W.R.D. பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டதை அடுத்து விஜயாநன்த தஹநாயக்க நியமிக்கப்பட்டார். இருப்பினும், அவரது அரசாங்கம் மற்றும் கட்சியின் உறுப்பினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அவர் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
06 – டட்லி சேனாநாயக
– 1960 மார்ச் 21 தொடக்கம் 1960 ஜூலை 21 வரை
ஒரு மாதத்தின் பின்னர் டட்லி சேனநாயக்கவின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது. டட்லி சேனநாயக்க 1960 ஜூலை 21 வரை பிரதமராக பணியாற்றினார்.
07 – சிறிமாவோ பண்டாரநாயக
– 1960 ஜூலை 21 தொடக்கம் 1965 மார்ச் 25 வரை
சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதல் பெண் பிரதமர் ஆவார். அவரின் நியமனத்தின் போது அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை, மேலும் ஆகஸ்ட் 2, 1960 அன்று செனட்டுக்கு நியமிக்கப்பட்டார்.
08 – டட்லி சேனாநாயக
– 1965 மார்ச் 25 தொடக்கம் 1970 மே 29 வரை
எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை அதிகாரம் கிடைக்காத தேர்தலின் பின்னர், டட்லி சேனாநாயகவின் கட்சி ஏனைய ஆறு கட்சிகளின் உதவியுடன் ஒரு அரசாங்கத்தை அமைத்ததன் மூலம் டட்லி சேனாநாயக சேனாநாயக்க மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக் காலத்தில் விவசாயத் துறைக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது.
09 – சிறிமாவோ பண்டாரநாயக
– 1970 மே 29 தொடக்கம் 1977 ஜுலை 23 வரை
சிறிமாவோ பண்டாரநாயக்க நாட்டை குடியரசாக அறிவித்தார், அதன் பெயர் சிலோன் என்பதிலிருந்து இலங்கை என்று மாற்றப்பட்டது. அவரது ஆட்சியில் பெருந்தோட்டத் துறையில் பல நிறுவனங்களை தேசியமயமாக்கியதுடன் பல இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இது நாட்டின் பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது, மேலும் அவர் 1977 பொதுத் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தோற்கடிக்கப்பட்டு பின்னர் அவர் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
10 – J.R. ஜயவர்தன
– 1977 ஜுலை 23 தொடக்கம் 1978 பெப்ரவரி 04 வரை
1978 இல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய J.R. ஜயவர்தன இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் பெற்ற ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
11 – ரணசிங்க பிரேமதாச
– 1978 பெப்ரவரி 04 தொடக்கம் 1989 ஜனவரி 02 வரை
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு மாற்றங்களின் பின்னர் J.R. ஜயவர்தன ஜனாதிபதியாக பொறுப்பேற்றதை தொடர்ந்து ரணசிங்க பிரேமதாச பிரதமராக நியமிக்கப்பட்டார், பிரதமர் பதவியின் அதிகாரங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டன.
12 – டிங்கிரி பண்டா விஜேதுங்க
– 1989 மார்ச் 06 தொடக்கம் 1993 மே 07 வரை
அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவால் டிங்கிரி பண்டா விஜேதுங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் 28 மார்ச் 1990 அன்று பதவியை ராஜினாமா செய்தார், ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு, 30 மார்ச் 1990 அன்று மீண்டும் நியமிக்கப்பட்டார்.
13 – ரணில் விக்ரமசிங்க
– 1993 மே 07 தொடக்கம் 1994 ஆகஸ்ட் 19 வரை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அப்போதை பிரதமர் டிங்கிரி பண்டா விஜேதுங்க ஜனாதிபதியானார். அதை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
14 – சந்திரிக்கா பண்டாரநாயக
– 1994 ஆகஸ்ட் 19 தொடக்கம் 1994 நவம்பர் 12 வரை
1994 இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு குறுகிய காலம் இலங்கையின் பிரதமராக பணியாற்றினார்.
15 – சிறிமாவோ பண்டாரநாயக
– 1994 நவம்பர் 14 தொடக்கம் 2000 ஆகஸ்ட் 09
சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட போது அவரது தாயாரான சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக நியமிக்கப்பட்டார். 2000-ம் ஆண்டு அவர் பதவி விலகினார்.
16 – ரத்னசிறி விக்ரமநாயக
– 2000 ஆகஸ்ட் 10 தொடக்கம் 2001 டிசம்பர் 07 வரை
சிறிமாவோ பண்டாரநாயக்க பதவி விலகியதை அடுத்து ரத்னசிறி விக்ரமநாயக பிரதமராக பதவியேற்றார்.
17 – ரணில் விக்ரமசிங்க
– 2001 டிசம்பர் 09 தொடக்கம் 2004 ஏப்ரல் 06 வரை
அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது அரசாங்கத்தை கலைத்து 2004 இல் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து விக்கிரமசிங்கவின் பதவிக்காலம் முன்கூட்டியே முடிவடைந்தது.
18 – மகிந்த ராஜபக்ஷ
– 2004 ஏப்ரல் 06 தொடக்கம் 2005 நவம்பர் 19 வரை
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் கலைக்கப்பட்டதை அடுத்து தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றார்.
19 – ரத்னசிறி விக்ரமநாயக
– 2005 நவம்பர் 19 தொடக்கம் 2010 ஏப்ரல் 21 வரை
இலங்கை ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பதவியேற்ற போது ரத்னசிறி விக்ரமநாயக பிரதமராக நியமிக்கப்பட்டார்.
20 – தி.மு. ஜயரத்ன
2010 ஏப்ரல் 21 தொடக்கம் 2015 ஜனவாரி 09 வரை
2010 ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
21 – ரணில் விக்ரமசிங்க
– 2015 ஜனவாரி 09 தொடக்கம் 2018 ஒக்டோபர் 26 வரை
2015 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
22 – மகிந்த ராஜபக்ஷ
– 2018 ஒக்டோபர் 26 தொடக்கம் 2018 டிசம்பர் 15
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டார்.
23 – ரணில் விக்ரமசிங்க
– 2018 டிசம்பர் 16 தொடக்கம் – 2019 நவம்பர் 21 வரை
ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்யப்பட்டது சட்டவிரோதமான செயல் என மேன்முறை செய்யப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற தீர்பின் படி ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
24 – மகிந்த ராஜபக்ஷ
– 2019 நவம்பர் 21 தொடக்கம் 2022 மே 09 வரை
2019 நடைபெற்ற இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபகக்ஷ வென்றதை தொடர்ந்து மஹிந்த ராஜபகக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டார்.
25 – ரணில் விக்ரமசிங்க
– 2022 மே 12 தொடக்கம் 2022 ஜுலை 20 வரை
மஹிந்த ராஜபகக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷவினால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
26 – தினேஷ் குணவர்தன
– 2022 ஜூலை 22 தொடக்கம் 2024 செப்டம்பர் 24 வரை
நாட்டு மக்களின் கடும் எதிர்பை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷ தனது பதவியை ராஜினமா செய்ததை அடுத்து ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். அதை தொடர்ந்து தினேஷ் குணவர்தன பிரதமராக நியமிக்கப்பட்டார்.
27 – ஹரினி அமரசூரிய
– 2024 செப்டம்பர் 24 தொடக்கம் இன்று வரை
2024 செப்டம்பர் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக வெற்றி பெற்று ஜனாதிபதியானதை தொடர்ந்து ஹரினி அமரசூரிய பிரதமராக நியமிக்கப்பட்டார்.
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!