உலகின் காணப்படும் மிகவும் ஆபத்தான பயங்கரமான குண்டுகள் – ஆயுதங்கள்
01. உயிரியல் ஆயுதங்கள்
வைரஸ்கள் அல்லது நோய்க்கிருமிகளைப் பயன்படுத்தி உயிரியல் ஆயுதங்கள் உருவாக்கப்படுகின்றன. உயிரியல் ஆயுதங்கள் ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிப்டையச் செய்ய முடியும்.
இதிலுள்ள ஆபத்தான விடயம் இந்த குண்டை ஏவியதன் பிறகு அதைக் கட்டுப்படுத்த முடியாது. இந்த ஆயுதம் குறிவைக்கப்படும் பகுதிக்கு மட்டும் மட்டுப்படுத்தாமையும் இதன் மற்றொரு ஆபத்தான விடயமாகும்.
இந்த ஆயுதங்கள் உலகின் முழு மக்களையும் அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டவுடன், பாதிக்கப்படுவதற்கான நிகழ்தகவு மற்ற ஆயுதங்களை விட அதிகமாக உள்ளது. உயிரியல் ஆயுதங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆந்த்ராக்ஸ், டூலரேமியா, மலேரியா மற்றும் எபோலா ஆகியவை குறிப்பிடலாம்.
02. இரசாயன ஆயுதங்கள்
ரசாயன ஆயுதங்கள் ஆபத்தான இரசாயனங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இவற்றை நான்கு வழிகளில் உற்பத்தி செய்யலாம்.
முதல் முறை தோலில் ஒரு விளைவை உருவாக்க கூடிய வகையில் உருவாக்குவது. இரத்த ஓட்ட அமைப்பை பாதிக்கக் கூடிய வகையில் இரசாயன ஆயுதங்களை உருவாக்குவது மற்றொரு வழி. மற்ற இரண்டு முறைகள் நரம்பு மண்டலம் அல்லது சுவாசத்தை பாதிக்கும் இரசாயன ஆயுதங்களாக உருவாக்குதல் ஆகும்.
ரசாயன ஆயுதங்களில் இருந்து வெளியாகும் ஒரு சிறிய அளவு விஷம் கடுமையான விளைவை ஏற்படுத்தும். மேற்கண்ட உயிரியல் ஆயுதங்களைப் போலவே, இந்த இரசாயன நச்சுகள் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்ட பின்னர் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகுமம்.
இது ஒரு ரசாயன விஷமாக அங்கீகரிக்கப்பட்டாலும், வளிமண்டலத்தில் இருந்து இதன் நச்சுத்தன்மையை அகற்றுவது மிகவும் கடினமான விடயமாகவுள்ளதுடன் அதற்கு அதிகளவான நேரம், பணம் மற்றும் முயற்சி தேவைப்படுகின்றது.
இனப்படுகொலைகளுக்கு மிக எளிதான ஆயுதம் என்று இதைச் சொல்லலாம். மஸ்டட் வாயு, ரய்சின் (ஆமணக்கு விதைகளில் இயற்கையாக நிகழும் நச்சு) மற்றும் லெவிசைட் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டுகளாக குறிப்பிடலாம். ஆனால் எந்தவொரு நாட்டிற்கும் இந்த இரசாயனங்களை ஒரு டன்னுக்கு மேல் சட்டப்பூர்வமாக வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை.
03. நேபாம் குண்டு
இது பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றது. இந்த வெடிகுண்டின் சிறப்பு என்னவென்றால், இது ஒரு எரியும் குண்டாக காணப்படுகின்றது. வியட்நாம் போரின் போது அமெரிக்கா இவ்வகையான குண்டுகளைப் பயன்படுத்தியது.
ஆனால் அதற்கு முன்பே இக் குண்டுகள் பாவனையில் இருந்துள்ளது. இந்த குண்டுகளில் மெக்னீசியத்தை தண்ணீரையும் எரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. பின்னர் அதை நச்சுத்தன்மையாக்க அதில் ஈயம் சேர்க்கப்பட்டது. இத்தகைய குண்டு வெடிப்பு காரணமாக, சுற்றியுள்ள வெப்பநிலை சுமார் 1200 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
04. அணுகுண்டு
இதுவரை தயாரிக்கப்பட்ட மிகக் கொடிய ஆயுதமாக அணுகுண்டை குறிப்பிடலாம். அணுக்கரு பிளவு அணு ஆயுதங்களுக்குத் தேவையான வெடிக்கும் ஆற்றலைப் பெற பயன்படுத்தப்படுகின்றது.
அணுகுண்டு வெடிப்பது முழுக்க முழுக்க அணுக்கருப் பிளவின் அடிப்படையில்தான் நிகழ்கின்றது. யுரேனியம் அல்லது புளூட்டோனியம் அணுகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் மிகவும் பிளவடையக்கூடிய தனிமமாகும்.
உலகின் மிகப் பிரபலமான அணுகுண்டு தாக்குதலை ஜப்பான் எதிர்கொண்டது. அது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா வீசிய அணுகுண்டு தாக்குதலாகும்.
இந்த இரண்டு குண்டுகள் மூலம் சுமார் 100,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. இது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களையும் முற்றிலுமாக அழித்தது.
குறித்த இரண்டு குண்டுகளைத் தயாரித்த திட்டம் “மன்ஹாட்டன் அணுசக்தி திட்டம்” என்று அழைக்கப்படுகிறது. 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் திகதி நடாத்தப்பட்ட இந்தக் கொடூரமான தாக்குதலின் விளைவுகள், பாதிப்புகள் இன்றும் காணக்கூடியதாக உள்ளது.
05. ஹைட்ரஜன் குண்டுகள்
இந்த குண்டுகள் “இணைவு குண்டுகள்” (Fusion Bomb) என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த குண்டுகள் ஹைட்ரஜன் ஐசோடோப்புகளான டிரிடியம் மற்றும் டியூட்டீரியம் ஆகியவற்றின் இணைவு எதிர்வினைகளில் செயல்படுகின்றன.
எட்வர்ட் டெல்லர் மற்றும் ஸ்டானிஸ்லாவ் ஆகியோரால் 1951 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இவ்வகையான குண்டுகள் திட்டமிடப்பட்டு மேம்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1955 வாக்கில், ஆண்ட்ரி சாகரோஃப் என்பவரால் சோவியத் ரஷ்யாவில் தனித்தனியாக உருவாக்கப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்டது.
அணுகுண்டை விட ஹைட்ரஜன் குண்டு மிகவும் செயற்திறன் வாய்ந்த குண்டாக கருதப்படுகின்றது. அத்துடன் அதனை உருவாக்கி இயக்குவதற்கு அணுகுண்டை விட அதிக முயற்சிகள் தேவைப்படுகின்றது.
ஒரு சில நாடுகள் மட்டுமே ஹைட்ரஜன் குண்டை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது, அவை அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளாகும்.
By – SARINIGAR
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!