NCE ஏற்றுமதி விருதுகளில் ஹலால் கவுன்சிலுக்கு தங்கப் பதக்கம்.

NCE ஏற்றுமதி விருதுகளில் ஹலால் கவுன்சிலுக்கு தங்கப் பதக்கம்
தேசிய ஏற்றுமதியாளர் கவுன்சிலால் (NCE) ஏற்பாடு செய்யப்பட்ட ஹலால் அங்கீகார கவுன்சிலுக்கு (Halal Accreditation Council), டிசம்பர் 8, 2023 அன்று நடைபெற்ற 31வது NCE ஏற்றுமதி விருதுகளில் தொடர்ச்சியாக 2வது முறையாக தங்க விருது வழங்கப்பட்டது.

2048 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக, இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் ஆற்றிய பங்களிப்பு பாராட்டத்தக்கது, மேலும் நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் வளர்ச்சியில் ஹலால் அங்கீகார சபை தனது தனித்துவமான பங்களிப்பிற்காக இது வழங்கப்பட்டது.

உலகளாவிய ஹலால் உணவுத் தொழில் 2025 ஆம் ஆண்டில் 1.67 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில், இலங்கை ஹலால் அங்கீகார சபை 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு ஆதரவளித்துள்ளது.

தேசிய ஏற்றுமதி உத்திகளை மேலும் மேம்படுத்துவதன் மூலம் இலங்கை ஏற்றுமதியாளர்கள் உலகளாவிய ஹலால் உணவுத் துறையில் நுழைவதற்கான வசதிகளை வழங்குவதை HAC நோக்கமாகக் கொண்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கையின் ஏற்றுமதித் துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திய ஹலால் அங்கீகார சபை, ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகள் தொடர்பான இருதரப்பு வர்த்தக நோக்கங்களை அடையும் நோக்கில் இலங்கை வர்த்தகக் குழுவுடன் அண்மையில் தாய்லாந்துக்கு விஜயம் செய்தது.

ஏற்றுமதி மூலம் நாட்டின் அமெரிக்க டொலர் வருமானத்தை வலுப்படுத்துவதும் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதும் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

ஹலால் அங்கீகார கவுன்சில் 2023 செப்டம்பரில் மலேசியாவில் நடைபெற்ற உலகளாவிய ஹலால் மாநாட்டில் பங்கேற்று, ஏற்றுமதித் துறைக்கு மிகவும் முக்கியமான 47 நாடுகளில் உள்ள முக்கிய பங்குதாரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் உறவுகளை உருவாக்க முடிந்ததுள்ளது.

ISO 17065 மற்றும் GSO 2055-2:2015 க்கு சான்றளிக்கப்பட்ட, ஹலால் அங்கீகார கவுன்சில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துகிறது, இது உலகளாவிய வணிகத்திற்கு அவசியமானது, மேலும் உற்பத்தியின் அனைத்து நிலைகளிலும் நுகர்வோரின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த உறுதிபூண்டுள்ளது.

சர்வதேச ஹலால் தரங்களின் அடிப்படையில் இலங்கையின் உணவு மற்றும் குளிர்பான உற்பத்தித் துறையில் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ஹலால் அங்கீகாரச் சபை தற்போது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மற்றும் பாரிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய ஆயிரத்திற்கும் அதிமானவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஹலால் சான்றளிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ரஷ்யா, அமெரிக்கா, ஜேர்மனி, நெதர்லாந்து, இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியம் உட்பட பல முஸ்லிம் அல்லாத நாடுகளுக்கும் மற்றும் பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், அஜர்பைஜான் போன்ற முஸ்லிம்கள் அதிமாக வாழும் நாடுகளுக்கான ஏற்றுமதி தேவை அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஹலால் அங்கீகார சபையின் பணிப்பாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அகிஃப் ஏ. வஹாப், இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த தனித்துவமான விருதைப் பெறுவதில் நாங்கள் பணிவும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.

தாய்லாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஹலால் தொடர்பான தெளிவான அரசாங்கக் கொள்கையை நிறுவுவது மிகவும் முக்கியமானது.

இது இலங்கை ஏற்றுமதியாளர்கள் நிலையான மற்றும் இலாபகரமான உலகளாவிய ஹலால் சந்தையில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம் விதிவிலக்கான பொருளாதார நன்மைகளைப் பெறுவதற்கு உதவும். என தெரிவித்துள்ளார்.

Assalamu Alaikkum!
Follow us to get more useful articles like this soon.
Subscribe to our Sarinigar Telegraph site. Also like our Facebook Page and WhatsApp channel. Post your valuable comments below. and Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!