உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு

Election, தேர்தல், உள்ளூராட்சிஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2023 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எந்தவொரு வேட்பாளருக்கும் ஆட்சேபனைகள் இருந்தால், நீதிமன்றத்தை அணுகலாம் என்று அவர் கூறியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய தற்போது வழங்கப்பட்டுள்ள வேட்புமனுக்களுக்கு அமையவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் எனக் குறிப்பிட்ட அவர், ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட வேட்பாளர்கள் வேறு அரசியல் கட்சிகளுக்கு சென்றிருந்தால் அது தொடர்பில் குறித்த அரசியல் கட்சிகளுடன் அவர்கள் கலந்துரையாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் இறந்துவிட்டால் மட்டுமே அவருக்குப் பதிலாக வேறொரு வேட்பாளரை நிறுத்த தேர்தல் ஆணையத்தினால் அனுமதிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு தேர்தல் அறிக்கைகள் தொடர்பில் அறிவூட்டும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.


செய்திகள்

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!