சார்க் அமைப்பு – தெற்காசிய நாடுகளிள் பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (SAARC)
செயலகம் – காத்மாண்டு, நேபாளம்
அரசகரும மொழி – ஆங்கிலம்
சார்க் அமைப்பு டிசம்பர் 8, 1985 இல் நிறுவப்பட்டது. இது அப்போதைய பங்காளதேசத்தின் ஜனாதிபதி ஷியாஉர் ரஹ்மானால் முன்மொழியப்பட்டது. தெற்காசிய நாடுகளில் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக பிராந்திய அமைப்பொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டது. 1981 ஆம் ஆண்டு இலங்கையில் கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த திட்டத்தை முன்வைத்தார்.
இத் திட்டத்தை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஏற்றுக்கொண்டதுடன் 1983 ஆம் ஆண்டில், அரச தலைவர்கள் இந்தியாவின் புது தில்லியில் சந்தித்து பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பின் அடித்தள அறிக்கை தயாரித்தனர்.
நேபாளம், மாலத்தீவு, பூட்டான், பாகிஸ்தான், இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவை அதன் நிறுவன உறுப்பினர்களாக இருந்தனர். இந்த நாடுகள் குறிப்பிட்ட விடயங்களில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான உடன்பாட்டை ஏற்றுக் கொண்டனர்.
தெற்காசிய நாடுகளிள் பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அன்றைய அரச தலைவர்கள்
- பங்களாதேஷ் – ஹுசைன் முஹம்மது எர்சாத்
- மாலைதீவுகள் – மகுமூன் அப்துல் கயூம் (தலைவர்)
- நேபாளம் – பிரித்ரா பீர் பிக்ரம் ஷா தேவ் (மன்னர்)
- இந்தியா – ராஜீவ் காந்தி (பிரதமர்)
- பாகிஸ்தான் – முகமது சியா-உல்-ஹக் (ஜனாதிபதி)
- இலங்கை – ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தன (தலைவர்)
- பூட்டான் – ஜிக்மி சிங்கியா வாங்சக் (மன்னர்)
ஆரம்பத்தில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாக இருந்தன. 2005 இல், ஆப்கானிஸ்தான் சார்க் அமைப்பில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதுடன் உறுப்பினராக இணைந்து கொள்வதற்காக விண்ணப்பித்தது.
அதனைத் தொரடர்து ஆப்கானிஸ்தான் ஏப்ரல் 2007 இல் சார்க் அமைப்பில் அதன் எட்டாவது உறுப்பு நாடாக இணைந்து கொண்டது. எதிர்காலத்தில் பார்வையாளர் அந்தஸ்திலிருந்து சார்க் அமைப்பின் அங்கத்துவ உறுப்பினராக உயர்த்தப்படுவதற்கு மியான்மர் விருப்பம் தெரிவித்துள்ளது.
இவ்வமைப்பின் பொது நோக்கங்கள்
- மண்டலத்தில் அமைதி, நிலைத்தன்மை, நட்புறவு மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல்.
- நல்ல அண்டை நாடுகளாக அர்த்தமுள்ள ஒத்துழைப்பை உருவாக்குங்கள்.
- அரசியல், பொருளாதார அமைப்புகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த கூட்டு நடவடிக்கைகளை எடுத்தல்.
- நிறுவன அமைப்பின் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை நிறுவுதல்.
பிரதான நோக்கம்
- தெற்காசிய நாடுகளின் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துதல்.
- பிராந்தியத்தில் பொருளாதார, உறுப்பினர் மற்றும் கலாசார அபிவிருத்தியை துரிதப்படுத்துதல் மற்றும் தனிநபர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குதல்.
- தெற்காசிய நாடுகளுக்கிடையில் கூட்டு சுயசார்பை ஊக்குவித்தல் மற்றும் வலுப்படுத்துதல்.
- பரஸ்பர நம்பிக்கையை வளர்த்தல், ஒருவருக்கொருவர் பிரச்சினைகளை சரியாக பாராட்டுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் பங்களிக்கவும்.
- பொருளாதார, உறுப்பு மற்றும் கலாச்சார, தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான துறைகளில் பரஸ்பர உதவி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.
- ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தல்.
- ஒரு பொதுவான விடயத்தில் சர்வதேச மன்றங்களில் அவர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.
- பொதுவான அபிலாஷைகள் மற்றும் குறிக்கோள்களுடன் சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுதல்.
சார்க் சாசனத்தின் பிரகாரம் நிறுவன கட்டமைப்பானது நான்கு பிரதான நிறுவனங்களைக் கொண்டிருக்கின்றது. இது ஒவ்வொரு உறுப்பு நாட்டின் வெளியுறவு அமைச்சர்களை உள்ளடக்கியதாகும்.
1. நிரந்தரக் குழு – உறுப்பு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
2. தொழில்நுட்பக் குழு
3. செயலாற்றுக் குழு
4. செயலகம்
சிறப்பு நிறுவனங்கள்
சார்க் உறுப்பு நாடுகள் பிராந்திய மையங்களிலிருந்து வேறுபட்ட விசேட அதிகாரங்கள் மற்றும் கட்டமைப்புகளுடன் சார்க்கில் பின்வரும் விசேட நிறுவனங்களை உருவாக்கியுள்ளன.
- சார்க் நடுவர் கவுன்சில் (SARCO), இஸ்லாமாபாத், பாகிஸ்தான்
- சார்க் அபிவிருத்தி நிதியம் (SDF) திம்பு பூட்டான்
- தெற்காசிய பல்கலைக்கழகம் (SAU), புது தில்லி, இந்தியா
- தெற்காசிய பிராந்திய தர நிர்ணய அமைப்பு (SARSO), டாக்கா, பங்களாதேஷ்
⬤ தெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதி (SAFTA)
தெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதிக்கு (SAFTA) மாறுவதற்கான முதல் படியாக ஜனவரி 6, 2004 அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 12வது சார்க் உச்சி மாநாட்டில் SAFTA ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஜனவரி 1, 2006 முதல் நடைமுறைக்கு வந்தது.
⬤ சார்க் விசா தள்ளுபடி திட்டம்
சார்க் விசா தள்ளுபடி திட்டம் 1992 இல் தொடங்கப்பட்டது. சார்க் நாடுகளுக்கிடையேயான மக்களுக்கு இடையிலான தொடர்புகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, நான்காவது உச்சி மாநாட்டின் தலைவர்கள் (இஸ்லாமாபாத், டிசம்பர் 29-31, 1988) சில பிரமுகர்களுக்கு விஷேட உரிமை இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
ஒரு சிறப்பு பயண ஆவணம் மூலம் பிராந்தியத்திற்குள் விசாக்களில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கும். தற்போது, இந்த பட்டியலில் பிரமுகர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள், தொழில்முனைவோர், பத்திரிகையாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
⬤ விருதுகள்
சார்க் விருது பன்னிரண்டாவது (12வது) உச்சி மாநாடு பிராந்தியத்திலுள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ஆதரவளித்தமைக்காக சார்க் விருதை அங்கீகரித்தது. இது 2004 இல் வழங்கப்பட்டதிலிருந்து, ஒரு முறை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மறைந்த வங்கதேச அதிபர் சியார் ரஹ்மானுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
உறுப்பு நாடுகள்
❂ இலங்கை
● அதிகாரப்பூர்வ பெயர் – இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு
● பரப்பு – சதுர கி.மீ 65610
● மக்கள் தொகை – (2024 மதிப்பீடு.) 22,231,000
● பணம் – இலங்கை ரூபாய்
● தலைநகரம் – ஜெயவர்தனபுர கோட்டை (நிருவாக) கொழும்பு (வணிக)
● அரசாங்கம் – ஒற்றையாட்சி ஜனாதிபதி – அரசியலமைப்புக் குடியரசு
● மொழி – சிங்களம், தமிழ், ஆங்கிலம் (கூட்டணி மொழி)
● மதங்கள் – பௌத்தர்கள் (70.42 %), இந்து மதம் (10.89 %, முஸ்லிம் (8.78 %), கத்தோலிக்கர் (7.77 %), கிறிஸ்தவர் (1.96 %), மற்றவர்கள் (1.13 %)
● முக்கிய நகரங்கள் – கண்டி, காலி, யாழ்பானம்
❂ இந்தியா
● அதிகாரப்பூர்வ பெயர் – இந்தியக் குடியரசு
● பரப்பு – சதுர கி.மீ 3,287,590
● மக்கள் தொகை – (2024 மதிப்பீடு) 1,384,380,000
● பணம் – இந்திய ரூபாய்
● தலைநகரம் – புது தில்லி
● அரசாங்கம் – கூட்டாட்சி நாடாளுமன்ற அரசியலமைப்புக் குடியர
● மொழி – வெவ்வேறு மாநிலங்களில் 17 பிற மொழிகள் பேசப்படுகிறது.
● ஆட்சி மொழிகள் – இந்தி, ஆங்கிலம்
● மதங்கள் – 79.8% இந்து, 14.2% இஸ்லாம், 2.3% கிறித்தவம், 1.7% சீக்கியம், 0.7% பௌத்தம், 0.4% சமணம், 0.23% சமயமற்றோர், 0.65% ஏனையோர்.
● முக்கிய நகரங்கள் – மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர்
❂ பாகிஸ்தான்
● அதிகாரப்பூர்வ பெயர் – பாகிஸ்தான்
● பரப்பு – சதுர கி.மீ 803,940
● மக்கள் தொகை – (2024 மதிப்பீடு) 236,939,000
● பணம் – பாகிஸ்தான் ரூபாய்
● தலைநகரம் – இஸ்லாமாபாத்
● அரசாங்கம் – கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசு
● மொழிகள் – உருது, ஆங்கிலம், பாஷ்கோ, பலூச்சி
● முக்கிய நகரங்கள் – கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, பைசலாபாத், பத்ரபந்த்
● மதங்கள் – இஸ்லாம் 90%, இந்து 2.1%, கிறிஸ்தவர்1.3%, பாசி மற்றும் பௌத்தர்
❂ மாலைதீவு
● அதிகாரப்பூர்வ பெயர் – மாலைதீவு குடியரசு
● பரப்பு – சதுர கி.மீ 298
● மக்கள் தொகை – (2024 மதிப்பீடு) 544,700
● பணம் – ரூஃபியா
● தலைநகரம் – மாலே
● அரசாங்கம் – குடியரசு
● மொழி – திவெயி
● மதங்கள் – சுன்னி முஸ்லிம்கள்
❂ நேபாளம்
● அதிகாரப்பூர்வ பெயர் – நேபாள ஜனநாயகக் குடியரசு
● பரப்பு – சதுர கி.மீ 147,181
● மக்கள் தொகை – (2024 மதிப்பீடு) 29,871,000
● பணம் – நேபாள ரூபாய்
● தலைநகரம் – காத்மாண்டு
● அரசாங்கம் – ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு
● மொழி – நேபாளி (அதிகாரப்பூர்வ) திபெத் மற்றும் பிற
● முக்கிய நகரங்கள் – படான், மோருங், படகோமா, பிரட்நகர், லலிதாபூர், மக்னாபூர்,
● மதங்கள் – இந்துக்கள் 90%, பௌத்தர்கள் 5%, முஸ்லிம்கள் 3%, கிறிஸ்தவர்கள் மற்றும் ஏனையோர் 2%
❂ பங்களாதேஷ்
● அதிகாரப்பூர்வ பெயர் – வங்காளதேசக் குடியரசு
● பரப்பு – சதுர கி.மீ. 147,570
● மக்கள் தொகை – (2024 மதிப்பீடு) 168,120,000
● பணம் – டகா
● தலைநகரம் – டாக்கா
● அரசாங்கம் – ஒரு சட்டவாக்க சபையுடன் கூடிய ஒற்றையாட்சி பல கட்சி குடியரசு
● மொழி – வங்காளம், ஆங்கிலம்
● முக்கிய நகரங்கள் – பாரோ, புனாகா, மோங்கல், பூம்கான்
● மதங்கள் – இஸ்லாம் (அரச மதம்) 88%, இந்து மதம் 11%
❂ பூட்டான்
● அதிகாரப்பூர்வ பெயர் – பூட்டான் இராச்சியம்
● பரப்பு – சதுர கி.மீ. ரூ.47,000
● மக்கள் தொகை – (2024 மதிப்பீடு) 777,200
● பணம் – நுகல்ட்ரம், இந்திய நாணயமும்
● தலைநகரம் – திம்பு
● அரசாங்கம் – மன்னர்
● மொழி – திசெங்கா, ஆங்கிலம்
● மதங்கள் – பௌத்தர்கள் 70%, இந்துக்கள் 25%, மற்றவர்கள் 5%
❂ ஆப்கனிஸ்தான்
● அதிகாரப்பூர்வ பெயர் – ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு
● பரப்பு – சதுர கி.மீ. 647,500
● மக்கள் தொகை – (2024 மதிப்பீடு) 35,581,000
● பணம் – ஆப்கானி
● தலைநகரம் – காபூல்
● அரசாங்கம் – இரண்டு சட்டமன்ற அவைகளைக் கொண்ட இஸ்லாமியக் குடியரசு (மூத்தோர் சபை, மக்கள் சபை)
● மொழி – புஷ்து மற்றும் தாரி
● மதங்கள் – இஸ்லாம் 99.7%, ஏனையோர் 0.3%
தகவல் | SARINIGAR
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!