இலங்கையின் முன்னணி மின்சாதன வர்த்தக நாமமான சம்சங் (Samsung), Bespoke AI Double Door குளிர்சாதனப் பெட்டியை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. Bespoke வடிவத்தைக் கொண்ட இலங்கை வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டு Convertible 5-in1, Twin Cooling Plus™ மற்றும் Active Fresh Filter+, புதிய வரிசையுடன் சேர்த்து WiFi Connectivity, Smart Things AI Energy Mode, SmartThings Home Care, Smart Forward போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
Bespoke AI Double Door குளிர்சாதனப்பெட்டி நேர்த்தியான துருப்பிடிக்காத உருக்கு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட துருப்பிடிக்காத உருக்கில் இருந்து பல வர்ண தேர்வுகளுடன் உருக்கு முடித்தல்களுடன் கிடைக்கப்பெறும். இந்த குளிர்சாதனப்பெட்டிகள் அதிக சேமிப்புத் திறன், வசதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதாக 304,999 இலங்கை ரூபாவின் ஆரம்ப விலையில் 396L திறன் கொண்டதாக உள்ளது.
சம்சுங் ஸ்ரீலங்கா, முகாமைத்துவ பணிப்பாளர் திரு சங்ஹ்வா சொங் கூறியதாவது, “குளிர்சாதனப்பெட்டிகளில் முன்னிலை பெற்றவர்களாக, குளிரூட்டலுக்கு அப்பால் எமது உபகரணங்கள் அணுகும் தன்மை, தகவமைப்பு மற்றும் அழகிய வடிவமைப்பு ஆகிய அனைத்தையும் கொண்டதாக தினசரி வாழ்வை மேம்படுத்துவதில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். அவை செயல்திறன், ஆற்றல் திறன் மற்றும் வடிவமைப்பை பயனர்களுக்கு வழங்கி, சிறந்த கலவையாக மேம்பட்ட AI அம்சங்கள், Bespoke வடிவம் மற்றும் அதிக சேமிப்பு திறனுடன் பொருத்தப்பட்டுள்ளது.”
SmartThings AI ஆற்றல் வடிவம்
AI ஆற்றல் வடிவம் குளிர்சாதனப்பெட்டியின் பயன்பாட்டு போக்கை பகுப்பாய்வு செய்வதன் மூலம் ஆற்றல் பயன்பாட்டை உகந்த வகையில் மாற்றுவதால், ஆற்றல் உபயோகத்தை 10% வரை குறைக்கிறது. இந்த அறிவுசார் அம்சம் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு சாதகமான வீடுகளுக்கான சிறந்த தேர்வை உருவாக்குகிறது. AI ஆற்றல் வடிவம் வீட்டு உபகரணங்களின் ஆற்றல் உபயோகத்தை செயற்றிறனுடன் நிர்வகிப்பதற்கு வழியை ஏற்படுத்துவதோடு அது கணிசமான அளவில் செலவை குறைப்பதற்கு வழிவகுக்கிறது. இந்த அம்சம் ஆற்றல் பயன்பாட்டை கண்காணித்து மற்றும் கட்டுப்படுத்துவதோடு, குளிர்சாதனப்பெட்டி உட்பட உபகரணங்களின் உச்ச செயற்றிறனில் இயங்குவதை உறுதி செய்கிறது.
SmartThings Home Care
Home Care ஆனது குளிர்சாதனப்பெட்டியின் கடந்த காலம் மற்றும் தற்போது தொடர்ந்து வரும் பிரச்சினையை கண்டறிந்து ஒப்பிட்டுப் பார்க்கும். அது குளிர்சாதனப்பெட்டி உகந்த நிலையில், உச்ச ஆற்றல் திறனை உறுதி செய்து, ஆயுளை நீடிப்பதற்கான நடைமுறை யோசனைகளை வழங்கும்.
ஸ்மார்ட் ஒளிரூட்டல் (மென்மையான ஒளி)
மங்களான ஒளி படிப்படியாக பிரகாசமானதாக மாற்றப்படும் அதேநேரம், SmartThings செயலி மூலம் “மென்மையான ஒளி” பிரகாசமான ஒளியாக சீராக்கப்படும். பயனர்களின் வசதியை மேம்படுத்துவதாக, ஒரு நாளின் நேரத்தின் அடிப்படையில் இரவு நேர ஒளி வடிவம் தானியக்க முறையில் ஒளிர்வு சரி செய்யப்படும்.
Convertible 5-in1
Convertible 5-in1 அம்சமானது நவீன இலங்கை வீடுகளின் அனைத்து சேமிப்பு தேவைகளுக்கும் பொருந்துவதாக ஐந்து மாற்ற வடிவங்களுடன் மேலதிக நெகிழ்வுப் போக்கை வழங்குகிறது. சேமிப்பவற்றின் ஒழுங்குபடுத்தலை உறுதி செய்வதாக மளிகை பொருட்கள் மற்றும் மீதமுள்ளவற்றுக்காக போதுமான இடத்தை வழங்குகிறது.
Twin Cooling Plus™
இந்த அம்சத்துடன், உங்களால் இரண்டு மடங்கு நீண்ட புதியமையை பெற முடியும். Bespoke AI Double Door குளிர்சாதனப்பெட்டி இரண்டு ஆவியாக்கிகள் மற்றும் விசிறிகளை பெற்றிருப்பதால் குளிர்சாதனம் மற்றும் உறைவூட்டி பகுதிகள் வெவ்வேறாக குளிரூட்டப்படுகின்றன. இது 70% ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு, துர்நாற்றம் கலப்பதை தடுத்து, நீண்ட நேரத்திற்கு உகந்த புதியமையை பேண உதவுகிறது.
Active Fresh Filter+
Active Fresh Filter+ குளிர்சாதனப் பெட்டிக்குள் காற்றை சுத்தமாக, சுகாதாரத்துடன் வைத்திருப்பதோடு 99.99மூ வரை பக்டீரியாவை அகற்றுவதன் மூலம் உணவு மாசடையும் அபாயத்தை குறைக்கிறது. அது துர்நாற்றங்களை நீக்குவதோடு, செயல்படுத்தப்பட்ட கார்பன் வடிகட்டி மூலம் காற்றை தொடர்ந்து கிருமி நீக்கம் செய்து வாசனையுடன் வைத்திருக்கும்.
Power Cool and Power Freeze
Power Cool and Power Freeze குறுகிய நேரம் ஒன்றில் பானங்களை திறம்பட குளிர்விப்பது மற்றும் உணவை உறைவிப்பதற்காக விரைவான குளிர்விப்பு மற்றும் உறைவிப்பதற்கு செயற்படுகிறது. இந்த அம்சம் விரைவான குளிரூட்டல் மற்றும் ஐஸ் தயாரிப்பதற்கான சூழலுக்கு பொருத்தமானதாகும்.
Digital Inverter Compressor
Digital Inverter Compressor தொடர்ச்சியான குளிர்விப்பு, ஆற்றல் விரயத்தை குறைப்பது மற்றும் தேய்மானத்தை குறைக்கிறது. 20 ஆண்டுகள் உத்தரவாதத்திற்கு உதவும் வகையில், நம்பகமான, நீண்ட கால செயற்றிறனை உறுதி செய்கிறது.
புதிய Bespoke AI Double Door குளிர்சாதனப்பெட்டி ரூ. 304,999 ஆரம்ப விலையுடன் சிங்ககிரி, சிங்கர் மற்றும் தம்ரோவில் கிடைக்கப்பெறும்.
The post Samsung அறிமுகம் செய்யும் மேம்பட்ட AI அம்சங்களுடன் Bespoke AI Double Door குளிர்சாதனப் பெட்டி appeared first on Thinakaran.