சைப்ரஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சைப்ரஸின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை  5.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி காலை 11:32 மணியளவில் பதிவானது.

லெபனானிலும் நிலநடுக்க உணரப்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

நில அதிர்வு இடம்பெறும் பகுதியில் சைப்ரஸ்  அமைந்து இருந்தாலும், அங்கு பதிவாகும் நிலநடுக்கங்கள் அரிதாகவே சேதத்தை ஏற்படுத்துகின்றன.

நன்றி

Leave a Reply