முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி கூட, அமைச்சரவையில் இடம்பெறாதது மிகுந்த கவலைக்குரியது

தமிழ்நாட்டின் புதிய முதல்வர் ஜோசப் விஜய்யின் புதிய அரசின் முதல் அமைச்சரவையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகப் பிரதிநிதி  இடம்பெறாதது கவலையளிக்கிறது.

அமைச்சரவை உருவாக்கத்தில் அனைத்துச் சமூகத்தினருக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அதில் ஒரு மிகப்பெரிய இடைவெளி இருப்பதை உணர முடிகிறது. குறிப்பாக, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி கூட இந்த அரசின் முதல் அமைச்சரவையில் இடம்பெறாதது மிகுந்த கவலைக்குரியது. ஒரு ஜனநாயக நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலும் அதிகார மையத்தில் ஒலிக்க வேண்டியது அவசியமாகும். 

தற்போது இந்தியா முழுவதும் முஸ்லிம் சமூகம் பல்வேறு அரசியல் காரணங்களால் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழல் நிலவுகிறது. இத்தகைய காலகட்டத்தில், சமூக நீதியைப் போற்றும் தமிழகத்திலும் அதே போன்றதொரு புறக்கணிப்பு தொடர்வது ஆரோக்கியமானதல்ல. சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், அவர்களின் அரசியல் பங்கேற்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமை இந்த அரசுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, வரும் காலத்தில் அதனைச் சரி செய்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

– முகம்மது முபாரக் –

தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு. 

நன்றி

Leave a Reply