21 வயதுக்குட்டவா்களுக்கு மதுபானங்களை விற்கத் தடை 

தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் 21 வயது பூர்த்தியடையாத இளைஞர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இதனை மீறி, குறைந்த வயதுடையவர்களுக்கு மது விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வயது குறித்து சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், அவர்களின் அடையாள அட்டையைச் சரிபார்த்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

The post 21 வயதுக்குட்டவா்களுக்கு மதுபானங்களை விற்கத் தடை  appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply