இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – Global Tamil News

 

இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை  6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்   அறிவித்துள்ளது.   இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

மேலும்  இலங்கை மற்றும் இந்தியக் கடற்கரைகளுக்கு  இந்த நிலநடுக்கத்தினால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலின் டெக்டோனிக் தட்டு   எல்லைகளுக்கு அருகில் நிகழும் வழக்கமான நில அதிர்வுகளில் ஒன்றாகும் எனவும்  இப்பகுதியில் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் பதிவாகுவது இயல்பானது எனவும்  வல்லுநர்கள் தெரிவித்துள்ளனா்

நன்றி

Leave a Reply