ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் திடீர் அக்கறையுடன் சிலர் பேச ஆரம்பித்துள்ளனர் – பேராயர்

Local News, தாக்குதல்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துவதாக இந்த நாட்டின் ஜனாதிபதி தனக்கு வாக்குறுதி வழங்கியுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதனை உன்னிப்பாக அவதாதித்துக் கொண்டு காத்திருப்பதாகவும், நாட்டின் ஜனாதிபதி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவித்த பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியதாவது.

இவ்வளவு காலமாக நாங்கள் என்ன செய்கிறோம் என்று கூட கேட்காமல் மௌனமாக இருந்தவர்கள், பாராளுமன்றத்தில் இதனைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் எங்கள் பணிகளுக்கு இடையூறு செய்தவர்கள். இப்போது திடீரென பெரும் அக்கரையுடன் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
கொமிஷன் அறிக்கைகள் எங்கே, அவை எங்கே இருக்கின்றது? என்று கேட்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தற்பொழுது புதிய வீரர்கள் சிலர் உருவாகியுள்ளனர்.
அவர்களினால் எந்த பிரயோஜனமும் இல்லை. கடந்த அரசாங்கத்தினால் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டன. அந்த அறிக்கைகள் கத்தோலிக்க ஆயர் பேரவைக்கு வழங்கப்பட்டன.
அந்த குழு அறிக்கையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் அவ்வாறே உள்ளடக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மீண்டும் அறிக்கையிடுவதற்கு குழுவொன்றை நியமிக்க வேண்டுமா?
ஆனால் அதில் சிறிய தந்திரமான வேலையை செய்துள்ளனர். அந்த பரிந்துரைகளுக்கு மத்தியில், இப்போது அரசாங்கத்தின் சார்பாக பணியாற்றும் இரண்டு உயர் அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. அந்த முன்மொழிவுகளை குறித்த குழுவிடம் யார் கொடுத்தது, அப்போதைய அரசாங்கமே தான்.
அரசாங்த்திற்கு வேண்டியவாறு ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை அங்குமிங்கும் அலைக்கழிப்பதற்கு நாம் தயாராக இல்லை. அவற்றை ஏற்க நாங்கள் தயாராக இல்லை. இதற்கு யார் உண்மையான காரணமானவர்கள்? உண்மையில் என்ன நடந்தது என்று நாங்கள் அறிய விரும்புகிறோம்?
இந்த நாட்டின் ஜனாதிபதி எமக்கு ஒரு வாக்குறுதியை வழங்கியுள்ளார். விசாரணை தொடங்கும். எங்கள் ஜனாதிபதி எமக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் உன்னிப்பாக அவதானத்துடன் இருக்கின்றோம்.

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!