அல்லாஹ்விடத்தில் உங்கள் ‘துஆ’க்கள் ஏன் ஏற்கப்படவில்லை? இதோ அதற்கான 10 காரணங்கள்…
இப்ராஹிம் இப்னு அத்ஹம் (رحمة الله عليه) இஸ்லாத்திற்காக வாழ்ந்து இஸ்லாத்தின் பால் பல மக்களை அழைத்து தன் உயிரை விட்டவர்.
ஒரு முறை அவர்கள் பாதையில் நடந்து சொல்லும் போது அவரிடம் வந்த மக்கள் நீங்கள் கூறியது போல் நாங்கள் அல்லாஹ்வை வணங்கி வாழ்கின்றோம் ஆனால் அல்லாஹ் ஏன் எங்களது ”துஆ”க்களை ஏற்று கொள்ளவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் பத்துக் காரணங்களை முன் வைத்தார்கள்.
01) நீங்கள் அல்லாஹ் (ﷻ) தான் உங்கள் இறைவன் என அறிந்து தெரிந்து வைத்து இருக்கின்றீர்கள், ஆனால் அதற்கான எந்த உரிமையையும் நீங்கள் அவனிடத்தில் கொடுக்கவில்லை.
02) நீங்கள் இறை வேதம் அல்-குர்ஆன் என ஏற்றுக் கொண்டீர்கள், ஆனால் அந்த குர்ஆன் கூறியபடி அமல்கள் செய்யவில்லை.
03) நீங்கள் அல்லாஹ் (ﷻ) கொடுத்த உணவை சாப்பிட்டீர்கள், ஆனால் அதற்காக அல்லாஹ்விடம் (ﷻ) எந்த நன்றியையும் செலுத்தவில்லை.
04) நீங்கள் அல்லாஹ்வின் தூதர், முஹம்மது நபி (ﷺ) அவர்கள் என ஏற்று கொண்டீர்கள், ஆனால் அவர்களின் வாழ்க்கை முறைகளைப் பின்பற்றி வாழவில்லை.
05) நீங்கள் ஷைத்தான் உங்களது எதிரி என ஒப்புக் கொண்டீர்கள். ஆனால் உங்கள் வாழ்க்கையில் பல செயல்களில் ஷைத்தானை சேர்த்து கொள்கின்றீர்கள்.
06) நீங்கள் மரணம் நிச்சியமானது என நம்புகின்றீர்கள், ஆனால் அதற்கான எந்த முன்னேற்பாட்டையும் செய்யவில்லை.
07) நீங்கள் சுவர்க்கம் உள்ளது உண்மையென ஏற்றுக் கொண்டீர்கள், ஆனால் அந்த சுவர்க்கத்தில் நுழைவதற்கான எந்த நல்ல அமலையும் செய்யவில்லை.
08) நீங்கள் நரகம் உண்மையென ஏற்றுக் கொண்டீர்கள், ஆனால் அதிலிருந்து பாதுக்காப்பு பெறுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
09) நீங்கள் பிறரது குற்றம் குறைகளை அலசி ஆராய்கின்றீர்கள், ஆனால் உங்களது குறைகளை மறைத்து கைவிட்டு விடுகின்றீர்கள்.
10) நீங்கள் மரணித்தவர்களை கொண்டு போய் அடக்கம் செய்கின்றீர்கள், ஆனால் அதிலிருந்து எந்தப் படிப்பினையையும் நீங்கள் பெற்றுக் கொள்ளவில்லை.
இந்த பத்து காரணங்களுக்காக அல்லாஹ் (ﷻ) உங்களது பிரார்த்தனைகளை செவிமடுக்கவில்லை என கூறினார்கள்.
– மௌலவி அப்துல் பாஸித் அல் புகாரி அவர்களது பயானிலிந்து
Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!