இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி, அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார். 36 வயதான அவர் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாட தொடர்ந்து விளையாட முடிவு செய்துள்ளார். இந்நிலையில் சர்வதேச டி20 போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. புதுப்பித்துள்ளது.
அதன்படி விராட் கோலி 909 புள்ளிகளுடன் தனது டி20 கெரியரை முடித்துள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இதன் மூலம் மூன்று வடிவிலான (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்) ஐ.சி.சி. தரவரிசை பட்டியலிலும் 900 புள்ளிகளை கடந்த ஒரே பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் சிறந்த தரவரிசை புள்ளிகள் 937 ஆகும். ஆகும். ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிறந்த தரவரிசை புள்ளிகள் 909 ஆகும். இவை இரண்டையும் அவர் 2018-ம் ஆண்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.