தொடர் தோல்வியின் எதிரொலி: முன்னனி இடத்தை பறிக்கொடுத்தார் மெத்வதேவ்

சமீபத்தில் நடைபெற்ற மயாமி பகிரங்க டென்னிஸ் தொடரில் செக் குடியரசின் இளம் வீரர் ஜாகுப் மென்சிக் முன்னனி வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார். இந்தத் தொடரின் முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் வெளியேறினார்.

இந்நிலையில், ஏடிபி தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், கடந்த 2023-ம் ஆண்டுக்கு பிறகு முதல் 10 இடங்களில் இருந்து முதன்முறையாக பின்தள்ளப்பட்டுள்ளார் ரஷியாவின் டேனில் மெத்வதேவ். தற்போதைய தரவரிசைப் பட்டியலில் மெத்வதேவ் 11-வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்திலும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 2வது இடத்திலும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 3வது இடத்திலும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5வது இடத்திலும் உள்ளனர்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!