நாமல் ராஜபக்ஷவை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன அழைப்பாணையை விடுக்குமாறு உத்தரவிட்டார்.

ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காகக் கூறி, இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!