மனிதாபிமானம் கற்றுத் தந்த, மகத்தான மாமனிதர் நபிகளார்

 

இளவரசர் வருகைக்காக நீண்ட நேரம் வெயிலில் காத்து நின்றதால் மயக்கம் ஏற்பட்டு தரையில் விழும் சிப்பாயின் புகைப்படம் இது.

வலியால் துடித்து அனைவர் கண்முன்பாகவும் அந்த வீரர் மரணிக்கிறார். ஆனாலும்கூட யாரும் அவரை அணுகத் துணியவில்லை. அணுகவும் கூடாது. அப்படி அணுகினால் பெரும் பிழை.

அதேவேளை….

அன்றொருநாள் தொலைதூர தேசத்தில், அரேபிய பாலைவனத்தில், ஒரு கிராமவாசி இறைத்தூதர் (ஸல்) அவர்களைக் காண வருகிறார்.

வந்தவர் சூழ்நிலையின் பிரமிப்பையும், நபிகளாரின் முகத்தில் தெரியும் பிரகாசத்தையும் கண்டு நடுங்கினார்.

கருணை நிறைந்த கண்களால் அவரைப் பார்த்த நபிகளார், மலைகளை அசைக்கக்கூடிய வார்த்தைகளைச் சொன்னார்கள்:

“நிதானமாக இருங்கள். நான் அரசன் அல்ல. மக்காவில் உலர்ந்த இறைச்சித் துண்டுகளை சாப்பிட்டு வாழ்ந்த ஒரு சாதாரண குறைஷிப் பெண்ணின் மகன்தான் நான்”. (அபூதாவூத்)

மனிதாபிமானம் கற்றுத் தந்த மகத்தான மாமனிதர் (ஸல்) அவர்கள்.

✍️ நூஹ் மஹ்ழரி

நன்றி

Leave a Reply