மினுவாங்கொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மினுவாங்கொட பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில்  கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

மினுவாங்கொடை வீதித் தடுப்பில் போதைப்பொருள் சோதனையின் போது ஏற்பட்ட மோதலின் போதே குறித்த  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!