59
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனான மு.க. முத்து உடல்நல குறைவால் காலமாகியுள்ளாா். பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற 77 வயதான மு.க.முத்து கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் காலமானார் என்பதை அவரது மனைவி சிவகாம சுந்தரி உறுதிப்படுத்தியுள்ளார். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளாா்.