முஸ்லிம்களின் சொத்துக்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காரசாரமான விவாதத்திற்கு பின்னர் இந்த பிரேரணை நிறைவேறியுள்ளது.
பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் சமூகத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பல பில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்துக்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பது தொடர்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்த சட்டத்தின் நோக்கமாகும்.
எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு மத்தியில் இந்திய பாராளுமன்றத்தின் இராஜ்ய சபாவில் அதனை ஆமோதித்த நிலையில் லோக் சபாவில் இன்றைய தினம் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இந்திய முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை மீறும் வகையிலும் அரசியல் யாப்பிற்கு முரணாகவும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முஸ்லிம் தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும் முஸ்லிம்களின் சொத்துக்களை மிகவும் வெளிப்படையாக நிர்வகிக்கும் நோக்கில் இதனை நிறைவேற்றியுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.