அநுர குமார திஸாநாயக்க – நிறைவேற்று அதிகாரம் பெற்ற இலங்கையின் 9வது ஜனாதிபதி

Anura Kumara, அநுர குமார திஸாநாயக்க
1965 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி காலி அக்மீமனயில் ரோஹன விஜேவீர தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆவார்.

திசாநாயக்க முத்யன்சேலாகே அநுர குமார திஸாநாயக்க அவர்கள் 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புதேகம கிராமத்தில் திஸாநாயக்க முதியன்சலாகே ரன்பண்டா மற்றும் திஸாநாயக்க முதியன்சலாகே சீலாவதி தம்பதியினருக்கு பிறந்தார்.

அநுர குமார திஸாநாயக்க தனது ஆரம்பக் கல்வியை தம்புத்தேகம கணிஷ்ட பாடசாலையில் (முன்னர் தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயம் என அழைக்கப்பட்டது) கற்றார்.

அதன் பின் உயர் தர கல்விக்காக தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில் சேர்ந்ததுடன் 1992 இல், உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தோற்று தனது பௌதீகப் பட்டப்படிப்பிற்காக களனிப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நுழைந்தார். 1995 இல் தனது Bachelor of Science பட்டத்தைப் பெற்றார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அவர் சில மாதங்களுக்குப் பின்னர் அச்சுறுத்தல் காரணமாக அங்கிருந்து வெளியேறினார். ஒரு வருடத்தின் பின்னர் 1992 இல் களனிப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் பெற்று 1995 இல் இயற்பியலில் இளங்கலை விஞ்ஞானப் பட்டம் பெற்றார்.

அநுர குமார திஸாநாயக்க தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயம் மற்றும் தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்று, குறித்த பாடசாலைகளிலிருந்து பல்கலைக்கழக அனுமதியைப் பெற்ற முதல் மாணவரானார்.

பாடசாலைப் பருவத்திலிருந்தே (ஜே.வி.பி.) மக்கள் விடுதலை முன்னனியின் பால் ஆர்வம் காட்டிய அநுர குமார திஸாநாயக்க, 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலப்பகுதியில் அக்கட்சியின் சோசலிச மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகளில் இணைந்துகொண்டார்.

1997ல் க்கள் விடுதலை முன்னனியின் மாணவர் அரசியல் பிரிவில் தீவிரமாக ஈடுபட்ட அவர் சோசலிஸ்ட் மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டதுடன் மக்கள் விடுதலை முன்னனியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

அதனை தொடர்து 1998 இல் க்கள் விடுதலை முன்னனியின் அரசியல் குழுவிற்கு நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டார்.

மக்கள் விடுதலை முன்னனியின் தேசியப் பட்டியலில் இருந்து 2000ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அவர், 2001ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் 2001ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க பங்களித்தார்.

2004 இல், மக்கள் விடுதலை முன்னனி மற்றும் இன்னும் பல கட்சிகள் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் (SLFP) கூட்டணி அமைத்ததுடன் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் (UPA) ஒரு பகுதியாகப் போட்டியிட்டு, நாடாளுமன்றத்தில் 39 ஆசனங்களைக் கைப்பற்றியது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திஸாநாயக்க 2004 பெப்ரவரியில் ஜனாதிபதி சந்திரிக்கா பன்டாரநாயக குமாரதுங்கவினால் SLFP-JVP கூட்டணி அரசாங்கத்தில் விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுனாமி நிவாரணங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளில் தமிழீல விடுதலைப் புலிகளுடன் உடன் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் அரசாங்கம் ஏற்படுத்திய சர்ச்சைக்குரிய கூட்டுப் பொறிமுறைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கு ஜே.வி.பி தலைவர் அமரசிங்க எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து ஏனைய ஜே.வி.பி உறுப்பினர்களும் அரசாங்கத்தை விட்டு வெளியேறினர்.

2008 இல், மக்கள் விடுதலை முன்னனியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட் அவர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

2 பெப்ரவரி 2014 அன்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 17வது தேசிய மாநாட்டில் சோமவன்ச அமரசிங்கவைத் தொடர்ந்து அநுர குமார திஸாநாயக்க மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 2015 பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட அவர் அதே ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் டிசம்பர் 17, 2018 வரை எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக பணியாற்றினார்.

2019 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்கள் இணைந்து தேசிய மக்கள் சக்தியின் பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கினர்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார், அங்கு அவருக்கு மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 3% வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் முதலாவது தேசிய மாநாட்டில் தேசிய மக்கள் சக்தியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர் 5,740,179 வாக்குகளைப் பெற்று இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டார். 

இரண்டாவது அதிகூடிய வாக்குகளைப் பெற்ற சஜித் பிரேமதாச 4530902 வாக்குகளைப் பெற்றார்.

வரலாற்றில் முதல் தடவையாக இரண்டாவது தடவையாக விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தற்க விடயமாகும்.

அவரது வெற்றியின் மூலம், சோசலிச சார்பு கொண்ட ஒரு கட்சியினால் நாடாளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்களுடன் மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் முதல் ஜனாதிபதி என்ற வரலாறு படைக்கப்பட்டது.

தகவல் – SARINIGAR


SARINIGAR WM

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!