அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance ) 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு வருகை தந்தார்.
இதன்போது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் பிரதமர் மோடியை சந்தித்தார்.
இச் சந்திப்பின்போது ஜே.டி.வான்ஸ் அவரது மனைவியான இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இதன்போது பிரதமர் மோடியும், ஜே.டி. வான்சும் கலந்துரையாடிக்கொண்டிருந்த வேளை ஜே.டி.வான்சின் குழந்தைகள் பிரதமர் மோடி அருகே சென்று அவரின் மடியில் அமர்ந்துகொண்டனர்.
இதையடுத்து குழந்தைகளுக்கு பிரதமர் மோடி மயில் இறகுகளை பரிசாக அளித்துள்ள நிலையில் அதை அக் குழந்தைகளும் பெற்றுக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.