இலங்கையில் நடைபெற்ற ‘அல் நக்பா’வை நினைவுகூரும் நிகழ்வில் இலங்கை பலஸ்தீன ஒருமைப்பாட்டுக் குழுவின் இணைத் தலைவரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்த கருத்துக்கள்
ஜனநாயகம் மற்றும் பாராளுமன்றவாதத்தின் பரந்த மற்றும் நல்லொழுக்க வரையறையுடன் உலகளாவிய பிரச்சினைகளை இலங்கை அணுகுகிறது. ‘எமது பாராளுமன்ற மற்றும் அரசாங்கத்தின் கொள்கை வகுக்கும் செயல்முறை பெறுமதிமிக்கது என்பதோடு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். நாம் வரலாற்றின் சரியான பக்கத்தில் இருக்க விரும்புகிறோம். மக்களால் வரலாறு எழுதப்படும்போது, உலகளாவிய நீதிக்காக நிமிர்ந்து நின்ற ஒரு தேசமாக இலங்கை பிரகாசிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.
மே 15, 1948 அன்று நடந்த நக்பாவுக்குப் பிறகு பலஸ்தீன மக்கள் பல தசாப்தங்களாக ஒடுக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பை அனுபவித்து வருகின்றனர் ஒக்டோபர் 7, 2023 தொடக்கம் பதினைந்து மாதங்கள் நீடித்த முன்னெப்போதும் இல்லாத இனப்படுகொலையான நக்பா, அமெரிக்காவின் முழு ஆதரவு மற்றும் உடந்தையுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை ‘அப்பாவிகள் மீதான படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் உலகத்தின் மனசாட்சியின் மீது படிந்த ஒரு கறை. சர்வதேச சமூகம் என்று தன்னைத்தானே அறிவித்துக் கொள்வது ‘முற்றிலும் அவமானகரமானது’ இது உலகளாவிய ஒழுங்கை அரித்து, நீதியை நிலைநிறுத்தவும் அனைத்து மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்ட நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துவிட்டது. முழு மக்களும் இனப்படுகொலை மற்றும் இடம்பெயர்வை எதிர்கொள்ளும்போது நாம் சும்மா இருக்க முடியாது.
பலவீனமானவர்களுக்கு அமுல்படுத்தப்படும் அதே வேளையில் பலம்வாய்ந்தவர்களுக்குப் புறக்கணிக்கப்படும் விதத்தில் சர்வதேச சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரால் ஒரு கருவியாக மாறுவதை நாம் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். இன அழிப்புக்கான அனைத்து முயற்சிகளையும் கண்டித்து, காஸாவில் உடனடி போர் நிறுத்தம், பலஸ்தீன பிரதேசங்களிலிருந்து இஸ்ரேலிய துருப்புக்களை திரும்பப் பெறுதல், ஜெரூஸலத்தில் உள்ள அல்-அக்ஸா பள்ளிவாயல் முற்றுகை மற்றும் அவமதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.