இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர ஒப்பந்த அறிக்கையின்படி, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் A ப்ளஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளனர்.
முகமது சிராஜ், கே.எல். ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ரிஷப் பண்ட் ஆகியோர் A பிரிவில் இடம்பெற்றுள்ளனர். B பிரிவில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஷ்வி ஜெய்ஷ்வால் உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.
C பிரிவில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட 20 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடாததால் கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது B பிரிவிலும், இஷான் கிஷன் C பிரிவிலும் இடம் பிடித்துள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த, மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெறுங்கள் – நியூஸ்21 WhatsApp குழுவில் இணையுங்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள
News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!