இன்று முதல் முன்னெடுக்கப்படும் விசேட போக்குவரத்து திட்டங்கள் 


சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு சென்ற மக்கள், மீண்டும் கொழும்புக்கு வரும் வகையில் விசேட போக்குவரத்து திட்டம் இன்று (17) ஆரம்பமாகி உள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள இந்த விசேட போக்குவரத்து திட்டத்தில் மேலதிகமாக 800 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, நாளை முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 
 
18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், வழமையான ரயில் சேவை, குறித்த தினங்களிலும் முன்னெடுக்கப்படும்.

இதேவேளை, கடந்த 6 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக 7,87,000 வாகனங்கள் பயணித்துள்ளதாகவும்   இதன் மூலம் 273 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள

News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!

JOIN NOW


🎧 Listen Live on Aha FM – Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply

error: Content is protected !!