ஓப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது . இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டி மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது .
நாளை டெல்லி-பஞ்சாப் இடையே தர்மசாலாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி மும்பைக்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போட்டியை மாற்றுவது தொடர்பாக பி.சி.சி.ஐ ஆலோசனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.