ஒப்போ F29 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | oppo f29 pro smartphone launched in india price specs

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ F29 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதோடு F29 ஸ்மார்ட்போனும் வெளிவந்துள்ளது.

செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ‘F’ சீரிஸ் போன்களின் வரிசையில் F29 புரோ வெளிவந்துள்ளது. இதில் சர்க்கிள் டு சேர்ச், ரீ-ரைட், ஏஐ சம்மரி உள்ளிட்ட ஏஐ அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

F29 புரோ சிறப்பு அம்சங்கள்

  • 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7300 எனர்ஜி (4 என்எம்) சிப்செட்
  • 8ஜிபி / 12ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 2 மெகாபிக்சல் கொண்டுள்ளது மற்றொரு கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 6000 mAh பேட்டரி
  • 80 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • 45 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் போனுடன் கிடைக்கிறது
  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது
  • 5ஜி நெட்வொர்க்
  • இந்த போனின் விலை ரூ.27,999 முதல் தொடங்குகிறது

நன்றி

Leave a Reply

error: Content is protected !!