மட்டக்களப்பு, ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதியிலுள்ள ஆற்றில் வெள்ளிக்கிழமை (18) அதிகாலை சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அடையாளம் காணப்படாத சடலம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
The post ஓட்டமாவடி ஆற்றில் சடலம்! appeared first on ITN News.