கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட தேடுதல்! – Athavan News

சென்னையிலிருந்து இலங்கை வந்த விமானம் மற்றும் அதில் வந்த பயணிகள் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலையடுத்தே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில்  கடந்த 22ஆம் திகதி  லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF)    நடத்திய  பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குறித்த  தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!