குருநாகல், வெஹெர பிரதேசத்தில் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்தில் இருந்த முகாமையாளர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (07) இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதுடன் மேலும் நால்வர் தீயில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குருநாகல் மாநகர சபையின் தீயணைப்புத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு எரிவாயு நிரப்ப வந்த லொறியில் 6,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்பு தொட்டிகளில் ஒன்று வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்டது.
வெடிக்காத மற்றைய 6,000 லிட்டர் எரிவாயு தொட்டியை தீயணைப்பு ஊழியர்கள் கடும் முயற்சியால் சீல் வைத்ததாகவும், இதனால் சேதம் குறைவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெறுங்கள் – நியூஸ்21 WhatsApp குழுவில் இணையுங்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள
News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!